ஆற்றை கடக்க முயன்ற பீரங்கி..!! திடீரென வந்த வெள்ளம்..!! 5 ராணுவ வீரர்கள் மரணம்..!!
ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வீரர்கள் பீரங்கி பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, அவர்கள் பீரங்கியுடன் ஆற்று வெள்ளத்தில் சிக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
ஜம்மு காஷ்மீரில் தௌலத் பேக் ஓல்டி பகுதியில் இன்று அதிகாலை 1 மணியளவில் பீரங்கி ஒன்று ஆற்றை கடக்க முயன்றுள்ளது. இந்த பீரங்கியில் 5 ராணுவ வீரர்கள் இருந்துள்ளனர். ஆற்றை கடக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் பீரங்கி முழுவதுமாக மூழ்கியுள்ளது. இதில் 5 வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களின் உடல்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் ராணும் தெரிவித்துள்ளது.
வீரர்கள் T-72 ரக பீரங்கியில் பயிற்சி செய்திருக்கின்றனர். சோவியத் யூனியன் காலத்தில் இந்த பீரங்கிகள் உற்பத்தி செய்யப்பட்டன. ரஷ்யாவிடம் இந்தியா ஏற்கனவே ஆயுத டீலிங் கொண்டிருந்ததால் இந்த பீரங்கிகள் ராணுவத்திற்காக வாங்கப்பட்டிருந்தன. இந்த பீரங்கிகள் சுமார் ஒவ்வொன்றும் சுமார் ரூ.4.16 கோடி மதிப்புடையதாகும். ஏறத்தாழ 41 ஆயிரம் கி.கி எடை கொண்ட இந்த வகை பீரங்கிகள், 60-75 கி.மீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டவை. ஆற்றில் செல்லும் திறன் கொண்டவையாக இவை அறியப்பட்டாலும், தண்ணீரில் செல்லும்போது பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ளும் பீரங்கிகளாக இது இருக்கிறது.
இதனை தயாரித்த ரஷ்யாவுமே இந்த பிரச்சனையை ஒப்புக்கொண்டுள்ளது. இந்த பீரங்கி நீருக்குள் செல்லும்போது சில நேரங்களில் ஸ்டக்காகி நின்றுவிடுகிறது என ரஷ்ய ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இப்படி இருக்கையில் தற்போது நடந்த விபத்து குறித்து ராணுவம் உயர்மட்ட விசாரணையை தொடங்கியுள்ளது.