மாணவர்கள் மீது தடியடி..!! தீவிரமடைந்த போராட்டம்..!! இன்று பந்த் அறிவிப்பு..!! பெரும் பரபரப்பு..!!
மேற்கு வங்கத்தில் மருத்துவர் கொலையைக் கண்டித்து மிகப் பெரியளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் அம்மாநில அரசைக் கண்டித்து பாஜக இன்றைய தினம் பந்த்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. நேற்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது போலீசார் தடியடி நடத்தியதைக் கண்டித்து இந்த பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த வழக்கில் கொல்கத்தா போலீசாரின் செயல்பாடுகள் விமர்சனத்தைக் கிளப்பிய நிலையில், சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. உண்மையான குற்றவாளிகளைக் காக்க திரிணாமுல் அரசு முயல்வதாகவும், இதனால் மம்தா ராஜினாமா செய்ய வேண்டும் என்பதையும் வலியுறுத்தி அம்மாநிலத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக அங்குள்ள மருத்துவ மாணவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நேற்று மேற்கு வங்க மாநில தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்திற்கு அம்மாநில அரசு அனுமதி தராததால், இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ரயில்வே தண்டவாள கற்களை எடுத்த போராட்டக்காரர்கள், அதை போலீசார் மீது வீசினர். இதையடுத்து, மாணவர்கள் மீது போலீசார் சரமாரியாகத் தடியடி நடத்தினர்.
மம்தா அரசின் இந்த செயல் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள பாஜக, தற்போது நேரடியாக போராட்டத்தில் குதித்துள்ளது. இன்று 12 மணி நேர பந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காலை 6 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை 12 மணி நேரம் மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என பாஜக அறிவித்துள்ளது.
இதை அடுத்து பல இடங்களில் போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில், அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மருந்தகங்கள், பால், காய்கறி வண்டிகளை தடுக்க வேண்டாமென பாஜக தலைமை தெரிவித்துள்ளது.
Read More : ’இவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குங்கள்’..!! அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி..!!