மக்களே...! பொங்கல் தொகுப்பில் வழங்கப்படும் கரும்பு 5 அடிக்கு மேல் இருக்க வேண்டும்...! தமிழக அரசு அதிரடி உத்தரவு..!
பொங்கல் தொகுப்பில் வழங்கப்படும் கரும்பு 5 அடிக்கு மேலாக இருக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு தனது அறிவிப்பில்; தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், வருகிற பொங்கல் பண்டிகைக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு 238 கோடியே 92 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2 கோடியே 19 லட்சத்து 57 ஆயிரத்து 402 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொங்கல் தொகுப்பில் 5 அடிக்கு மேலாக கரும்பு சேர்க்கப்பட்டு அதன் கொள்முதல் விலை 33 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டுறவுத் துறை மூலம் கண்காணிக்கப்பட்டு கரும்பு கொள்முதல் செய்ய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் 2 கோடியே 19 லட்சம் அளவுக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது. கரும்பு அதிக அளவில் பயிர் செய்யும் மாவட்டங்களில் இருந்து தேவைப்படும் மற்ற மாவட்டங்களுக்கு கரும்புகள் கொள்முதல் செய்யப்படும். இடைத்தரகர்கள் பிரச்சனையின்றி கரும்பு கொள்முதல் நடைபெற வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.