முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிப்பு..!! இனி மரணமே கிடையாது..? அசத்திய ரஷ்யா..!! மக்களுக்கு இலவசமாம்..!!

The Russian government has developed a cancer vaccine, local media reported.
01:21 PM Dec 18, 2024 IST | Chella
Advertisement

ரஷ்ய அரசாங்கம் புற்றுநோய் தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement

புற்றுநோய்க்கு எதிராக ரஷ்யா தனது சொந்த mRNA தடுப்பூசியை உருவாக்கியுள்ளது, இது நோயாளிகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும் என்று ரஷ்ய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்ய விஞ்ஞானிகள் புற்றுநோய்க்கான தடுப்பூசிகளை உருவாக்கும் கடைசி டெஸ்ட் நடந்து வருவதாகவும் விரைவில் இது நோயாளிகளுக்கு கிடைக்கும் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பே அதிபர் புடின் இது தொடர்பாக ஊடகங்களில் பேசுகையில், புற்றுநோய் தடுப்பூசிகள் மற்றும் இம்யூனோமோடூலேட்டரி மருந்துகளை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இதன் கடைசி கட்ட ஆய்வுகளை செய்து வருகிறோம். விரைவில் மக்களுக்கு கிடைக்கும் என்று தெரிவித்திருந்தார். விரைவில் இது மக்கள் பயன்பாட்டிற்கு வரும். இவை மக்களுக்கு நேரடி சிகிச்சை கொடுக்கும் பலனை விட அதிக பலனை கொடுக்கும். கேன்சர் பாதிப்பில் இருந்து மக்களை காக்கும் என்று தெரிவித்துள்ளார்.

கேன்சர் பாதிப்பு : வருடங்கள் ஓடினாலும், பல தொழில்நுட்பங்கள் வந்தாலும் இன்னும் மாறாத குணப்படுத்த முடியாத விஷயம் என்றால் அது புற்றுநோய் தான். பல ஆய்வுகள், ஆராய்ச்சிகளுக்கு பின்பும் கேன்சருக்கு முழுமையாக மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது. சில மருந்துகள் கேன்சருக்கு எதிராக நம்பிக்கை அளித்தாலும், அதை முழுமையாக குணப்படுத்தாமல் இருந்தது. இப்போது வரை கீமோதெரபிதான் கேன்சருக்கு எதிராக முக்கியமான சிகிச்சையாக இருக்கிறது.

கடந்தாண்டு கூட அமெரிக்காவில் கேன்சருக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட மருந்து ஒன்று சோதனையில் கேன்சர் நோயாளிகளை குணப்படுத்தியுள்ளது. சோதனையில் கலந்து கொண்ட கேன்சர் நோயாளிகளும் இந்த மருந்து எடுத்துக்கொண்ட பின் குணமடைந்த சம்பவம் உலக அளவில் கவனம் பெற்றது. இந்நிலையில்தான் இன்னொரு ஆராய்ச்சியில் இதேபோல் கேன்சருக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

ரைஸ் பல்கலைக்கழகம், டெக்சாஸ் ஏ & எம் பல்கலைக்கழகம் மற்றும் டெக்சாஸ் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் நிபுணர்களைக் கொண்ட கூட்டு ஆராய்ச்சிக் குழு, அற்புதமான கண்டுபிடிப்பை கேன்சருக்கு எதிராக செய்துள்ளது. புற்றுநோய் செல்களை அகற்றுவதற்கான ஒரு முறையை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஒளியை வைத்து தூண்டுவதன் மூலம் சில மூலக்கூறுகளை அதிர வைத்து, அந்த அதிர்வை வைத்து கேன்சர் செல்களை கொல்லும் மருத்துவத்தை இவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

Read More : இனி ரயிலில் டிக்கெட் எடுத்தால் மட்டும் போதாது..!! இதையும் எடுத்துச் செல்ல வேண்டும்..!! இல்லையென்றால் அபராதம்..!!

Tags :
கேன்சர்புற்றுநோய்மருந்து கண்டுபிடிப்பு
Advertisement
Next Article