முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இந்தியாவில் கேன்சர் மருந்துகளுக்கு தடை..? இந்திய மருந்து கட்டுப்பாட்டு குழுமம் அதிரடி உத்தரவு..!!

The Indian Drug Control Group has decided to withdraw Cancer Diseases of Astrajenaga, a Govishland manufacturer.
07:28 AM May 24, 2024 IST | Chella
Advertisement

கோவிஷீல்டு தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனேகாவின் கேன்சர் நோய் மருந்துகளை திரும்ப பெற இந்திய மருந்து கட்டுப்பாட்டு குழுமம் முடிவு செய்துள்ளது.

Advertisement

கோவிஷீல்டு தடுப்பூசியின் தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் அண்மையில், பிரிட்டிஷ் நீதிமன்றத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி மிக அரிதாக சிலருக்கு பக்கவிளைவு ஏற்படுத்தலாம் என ஒப்புக்கொண்டது. இது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து, இதே நிறுவனம் தயாரிக்கும் கேன்சர் மருந்து குறித்து முக்கிய தகவலை இந்திய மருந்து கட்டுப்பாட்டு குழுமம் தெரிவித்துள்ளது.

அதன்படி, அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் கேன்சர் நோயாளிகளின் கீமோதெரபி சிகிச்சைக்கு அளிக்கும் ஓலாபாரிப் (Olaparib) மருந்தை ஆய்வுக்கு உட்படுத்தியது. ஆய்வு முடிவுகளை அடுத்து, தற்போது மாநில மருந்து கட்டுப்பாட்டாளர்களுக்கு அனுப்பிய உத்தரவில், ஓலாபாரிப் (Olaparib) மருந்துகளை திரும்ப பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும் என குறிப்பிப்பட்டுள்ளது. மே 16ஆம் தேதியன்று DCGI குழுமத்திற்கு ஆராய்ச்சியாளர்கள் அனுப்பிய தகவலின்படி, அஸ்ட்ராஜெனெகா ஃபார்மா இந்தியா லிமிடெட் நிறுவனம், கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் மற்ற சில புற்றுநோய் சிகிச்சைக்காகவும் பயன்படுத்தப்படும் ஓலாபாரிப் (Olaparib) 100மிகி மற்றும் 150மிகி மாத்திரைகளை திரும்ப பெறுவதற்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருந்தும், குறிப்பிட்ட கேன்சர் நோயாளிகளுக்கு கீமோதெரபி பல்வேறு கட்ட சிகிச்சையில் ஓலாபாரிப் (Olaparib) மருந்துகளை தொடர்ந்து அளிக்கப்படுவதை கருத்தில் கொண்டு, விரைவாக ஓலாபாரிப் (Olaparib) 100mg மற்றும் 150mg மாத்திரைகளை சந்தைப்படுத்துதலை திரும்பப்பெற வேண்டும் என DCGI சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்த மாத்திரைகள் கடந்த ஆகஸ்ட் 13, 2018 அன்று கருப்பை புற்றுநோய் மற்றும் சில வகையான மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக DCGI ஆல் அங்கீகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read More : இந்த புகாரில் சிக்கினால் இனி ரேஷன் கடை ஊழியர்கள் நிரந்த பணிநீக்கம்..!! தமிழ்நாடு அரசு எச்சரிக்கை..!!

Advertisement
Next Article