நீதிமன்றம் அதிரடி...! சொத்து வழிகாட்டி மதிப்பீட்டை மாற்றி அமைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை ரத்து...!
சொத்துக்களுக்கான வழிகாட்டி மதிப்பீட்டை மாற்றி அமைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை ரத்து.
தமிழகத்தில் வழிகாட்டி மதிப்புகள் விவசாய நிலங்களுக்கு ஏக்கரிலும், மனை நிலங்களுக்கு சதுரடியிலும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இவ்வாறு நிர்ணயம் செய்யப்பட்ட வழிகாட்டி மதிப்புகள் பெரும்பாலான இடங்களில் வெளிச்சந்தை மதிப்பை விட மிக மிக குறைவாக உள்ளன. எனவே வழிகாட்டி மதிப்பு மாற்றியமைக்கப்பட்டது.
மனையிடங்களின் வழிகாட்டி மதிப்பு மிக மிக குறைவாக இருந்ததால் வங்கிகளில் சொத்தின் மதிப்பிற்கு ஏற்றாற்போல் கடன் பெற முடியவில்லையென 27.07.2023 அன்று நடைபெற்ற பதிவுத்துறை கருத்து கேட்பு கூட்டத்தில் கட்டடம் கட்டி விற்போர் சங்க பிரதிநிதிகளும், மனைப்பிரிவு ஏற்படுத்தி விற்போர் சங்க பிரதிநிதிகளும் தெரிவித்தனர். இதையடுத்து சொத்துக்களுக்கான வழிகாட்டி மதிப்பீட்டை மாற்றி அமைத்தது அரசு. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்ட விதிகளின்படி எந்த கலந்தாலோசனையும் நடத்தாமல், பொதுமக்களின் கருத்துகள் கேட்காமல் வழிகாட்டி மதிப்பீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி தமிழகத்தில் சொத்துக்களுக்கான வழிகாட்டி மதிப்பீட்டை மாற்றி அமைத்து கடந்த ஆண்டு தமிழக அரசு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது. பொதுமக்கள் கருத்துக்களை பெற்று அதன்பிறகே வழிகாட்டு மதிப்பை நிர்ணயிக்க முடியும்”, எனக்கூறி அந்த சுற்றறிக்கையை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.