முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஷாக்...! 3 ரூபாய் மின்சார மானியம் ரத்து... பெட்ரோல், டீசல் வரி உயர்வு...! பஞ்சாப் அரசு அதிரடி

Cancellation of Rs 3 electricity subsidy... Increase in petrol and diesel tax
07:15 AM Sep 06, 2024 IST | Vignesh
Advertisement

நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பஞ்சாப் அரசு, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்பு வாட் வரியை உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல 7 கிலோவாட் வரை உள்ள நுகர்வோருக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.3 மின்சார மானியம் திரும்பப் பெறப்படுவதாகவும் அறிவித்தது. மேலும் பஸ் கட்டணத்தை கி.மீ.க்கு 23 பைசா உயர்த்தியது.

Advertisement

சண்டிகரில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு நிதி அமைச்சர் ஹர்பால் சீமா இந்த முடிவுகளை அறிவித்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில நிதி அமைச்சர் செப்டம்பர் 4-ம் தேதி வரை அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலையில், மாநிலத்தின் தற்போதைய நிதிச் சவால்களுக்கு தீர்வு காண அமைச்சரவைக் கூட்டத்தை முதல்வர் பகவந்த் மான் கூட்டினார்.

கூட்டத்தில் பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்தபோது மின் கட்டணத்தில் ரூ.3 மானியமாக வழங்கப்பட்டது. தற்போது இந்த மின் கட்டண மானியத்தை அரசு ரத்து செய்துள்ளது. மின் கட்டணத்துக்கு மானியம் வழங்குவதால் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.1,500 கோடி முதல் ரூ.1,800 கோடி வரை கூடுதல் செலவாகிறது. எனவே மின் கட்டண மானியத்தை அரசு ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. மேலும் பெட்ரோல் மீதான வாட் வரியை லிட்டருக்கு 61 பைசாவும், டீசலுக்கு 92 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.

அதே நேரத்தில் வீடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாதம்தோறும் 300 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் தொடரும். தற்போது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.97.01 ஆகவும், டீசலின் விலைரூ.87.21ஆகவும் உள்ளது. தற்போது வாட் வரி உயர்த்தப்பட்டுள்ளதால் பெட்ரோல், டீசலின்விலை உயரும். இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

Tags :
EB billpetrol pricepunjab government
Advertisement
Next Article