வங்கியில் 3000 காலி பணியிடங்கள்.. டிகிரி முடித்திருந்தால் போதும்.. உள்ளூரிலே பணி.. ..!! மிஸ் பண்ணிடாதீங்க..
கனரா வங்கி ஆனது Apprentices பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 3000 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 20-28 வயதிற்குள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Sc/st/மற்றும் பழங்குடியினர் பிற்படுத்தப்பட்டோருக்கு 5 ஆண்டுகள் வயது தளர்வு உண்டு, அதேபோல பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு 3 ஆண்டும் ,மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டும்,விதவைகள், விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள் மற்றும் கணவரிடமிருந்து சட்டப்பூர்வமாகப் பிரிந்த பெண்கள், மறுமணம் செய்து கொள்ளாதவர்களுக்கு வகுப்புகள் வாரியாக 35-40 வயது வரை வயது தளர்வு உண்டு.
ஊதிய விவரம்:
ஒரு ஆண்டுக்கான அப்ரண்டீஸ் பணியாளராக தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.15,000 /- வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் Online Test /Knowledge and Test of Local Language மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக தமிழ்நாட்டில் இருந்து விண்ணப்பிப்பவர்கள் நன்கு தமிழ் தெரிந்திருந்தாலே போதுமானது.
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பதாரர்கள் வங்கியில் தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் முன் www.nats.education.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அப்ரண்டிஸ்ஷிப் போர்ட்டலில் 100% முழுமையான சுயவிவரம் கொண்ட விண்ணப்பதாரர் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்.
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் CANARA BANK இணையதளமான https://canarabank.com/ மூலம் ஆன்லைனில் 04.10.2024 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
Read more ; 6 வயதில் கடத்தப்பட்ட சிறுவன்.. 76 வயதில் கண்டுபிடிப்பு..!! 70 வருட பாச போராட்டத்தின் நெகிழ்ச்சி கதை..