For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பிரசவ வார்டுகள் நிரம்பி வழிகிறது.. இந்திய பெண்கள் குழந்தை பெறவே இங்கு வருகிறார்கள்..!! - கனடா இளைஞரின் வீடியோவால் சர்ச்சை

Canadian Man Claims Pregnant Indian Women Fly To Canada For Free Births, Sparks Outrage
10:39 AM Nov 18, 2024 IST | Mari Thangam
பிரசவ வார்டுகள் நிரம்பி வழிகிறது   இந்திய பெண்கள் குழந்தை பெறவே இங்கு வருகிறார்கள்       கனடா இளைஞரின் வீடியோவால் சர்ச்சை
Advertisement

இந்தியப் பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ள மட்டும் கனடா வருவதாகவும் இதனால் கனடா நாட்டு மக்களின் வரிப்பணம் வீணாவதாகவும் கனட இளைஞர் ஒருவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்தியா- கனடா இடையே கடந்த சில காலமாகவே மோசமான உறவு நிலவி வரும் நிலையில் இந்த கருத்துக்கு வலுவான கண்டனங்கள் எழுந்துள்ளது.

Advertisement

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் தனி நாடு கோரி போராடிய காலிஸ்தான் தீவிரவாதிகளில் பலர் கனடாவில் தஞ்சமடைந்து உள்ளனர். அங்கிருந்து இந்தியாவுக்கு எதிராக நாச வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே கனடா நாட்டை சேர்ந்த சாட் ஈரோஸ் என்பவர் இந்தியப் பெண்கள் குறித்து சில சர்ச்சை கருத்துக்களைக் கூறி இருக்கிறார். அதாவது கருவுற்று இருக்கும் இந்தியப் பெண்கள் பிரசவத்திற்காகக் கனடாவுக்குச் செல்வதாக அவர் கூறியிருக்கிறார். கனடாவில் குழந்தை பெற்றுக் கொள்ளும் அவர்கள், குடியுரிமை பெற இதைப் பயன்படுத்திக் கொள்வதாகவும் அதன் பிறகு குடும்பத்தினரை மொத்தமாக அழைத்து வருவதாக கூறியிருக்கிறார்..

கனடாவில் உள்ள பிரசவ வார்டுகள் இந்தியப் பெண்களால் நிரம்பி இருக்கிறது. கனடா மருத்துவமனைகள் யாருக்கும் சிகிச்சை அளிக்காமல் திருப்பி அனுப்பாது. இதன் காரணமாகவே வெளிநாட்டு இந்தியப் பெண்களை அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். கனடா நாட்டில் அனைவருக்கும் சமமான சிகிச்சை தரப்பட வேண்டும் என்றாலும் இந்தியப் பெண்கள் அதிக இடங்களை எடுத்துக் கொள்கிறார்கள். வார்டுகள் இந்தியப் பெண்களால் நிரம்பி இருக்கிறது.

அவர்கள் கனடா நாட்டை சேர்ந்தவர்கள் இல்லை என்பதால் இதற்குப் பிரசவத்திற்கு பில் கட்ட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் இதில் அவர்களுக்கு என்ன லாபம் எனக் கேட்கிறீர்களா.. கனடாவில் பிறப்பதால் அந்த குழந்தை கனடா குடியுரிமை பெறுகிறது. அந்த குழந்தை வளர்ந்த பிறகு கனடாவுக்கு வருகிறது. சீக்கிரமே பெற்றோர் உட்பட குடும்பத்தையே ஸ்பான்சர் செய்து கூட்டி வந்துவிடுகிறார்கள். கனடா நாட்டவர் கட்டும் வரியில் அதன் பிறகு அவர்கள் இங்கேயே இருந்துவிடுகிறார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவும் நிலையில், நெட்டிசங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தியர்களை மட்டும் குறிவைத்து ஆதாரமில்லாமல் இதுபோல சொல்வதை ஏற்க முடியாது எனப் பலரும் சாடிவருகின்றனர்.

https://twitter.com/RealChadEros/status/1856565705652470193

Read more ; Madhya Pradesh : மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தின் போது சிரித்த அதிகாரிக்கு நோட்டீஸ்..!!

Tags :
Advertisement