For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கட்டுப்பாடுகள் அகற்றம்!... கனடா மாணவர்களுக்கு பணிநேரம் குறைவு!

09:43 AM May 01, 2024 IST | Kokila
கட்டுப்பாடுகள் அகற்றம்     கனடா மாணவர்களுக்கு பணிநேரம் குறைவு
Advertisement

Canada: கனடாவில் கல்வி கற்கும் மாணவர்களின் வேலை நேரத்தை வாரத்திற்கு 40 மணிநேரத்தில் இருந்து 20 மணி நேரமாக குறைத்து அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

Advertisement

கனடாவில் கல்வி கற்க வரும் மாணவர்கள், தங்கள் பணத்தேவைகளுக்காக, வார்த்தில் 20 மணி நேரம் வேலை செய்யலாம் என அனுமதியளிக்கப்பட்டிருந்தது. கோவிட் காலகட்டத்தில் கனடாவில் பணியாளர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டதால், அதை சமாளிக்க, மாணவர்கள் கூடுதலாக சில மணி நேரம் பணி செய்ய அனுமதிக்கப்பட்டது. அதாவது, கல்வி கற்கும் மாணவர்கள் 20 மணி நேரம் மட்டுமே வேலை செய்யலாம் என்னும் கட்டுப்பாடு அகற்றப்பட்டது.

ஆனால், அந்த விதி, நேற்றுடன், அதாவது, ஏப்ரல் மாதம் 30ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இனி, கல்வி கற்கும் சர்வதேச மாணவர்கள், வாரத்துக்கு 20 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய அனுமதி உண்டு. கனடாவுக்கு சர்வதேச மாணவர்களை அனுமதிப்பதன் நோக்கமே, அவர்களுக்கு கல்வி அளிப்பதற்காகத்தான். ஆனால், அவர்களை குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் பணி செய்ய அனுமதிப்பதால், கனடாவுக்கு வரும்போதே, கல்வி கற்கும் நோக்கத்துடன் வராமல், பணி செய்யும் நோக்கத்துடன் வருபவர்கள் இருக்கிறார்கள் என்று கனடா குடியுரிமை அமைச்சர் மார்க் மில்லர் கூறியுள்ளார்.

இந்த, வாரத்துக்கு 20 மணி நேரம் வேலை செய்யும் அனுமதி, செப்டம்பர் மாதம் வரை அமுலில் இருக்கும். செப்டம்பருக்குப் பிறகு அதை 24 மணி நேரமாக அதிகரிக்க கனடா அரசு திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement