"என் படுக்கையில பாதி இடம் உனக்கு தான்.." படுக்கையை வாடகை விட்ட கனடா பெண்ணின் நூதன விளம்பரம்.!
கனடா பெண் ஒருவரின் விளம்பரத்தால் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. நாம் வீடு கார் சைக்கிள் பைக் போன்றவற்றை வாடகைக்கு விட்டு பார்த்திருப்போம். ஆனால் படுக்கையை வாடகைக்கு விட்டு பார்த்திருப்போமா.? அதுதான் தற்போது கனடாவில் நடந்திருக்கிறது.
அன்யா எட்டிங்கர் என்ற பெண் தான் இந்த ஆச்சரியமான விளம்பரத்திற்கு சொந்தக்காரர். கனடா நாட்டின் போராட்ட நகரில் வசிக்கும் இவர் தனது படுக்கையை பகிர்ந்து கொள்ள இருப்பதாகவும் அதற்கு பெட் மேட் தேவை எனவும் அந்த விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் vidmate ஆக வருபவர்களுக்கு சில நிபந்தனைகளையும் விதித்திருக்கிறார் அவர்.
இதன் படி தன்னுடைய படுக்கையை பகிர்ந்து கொள்ளும் நபர் பெண்ணாக இருக்க வேண்டும் என்றும் மேலும் அவர் ஒரு வருடம் தன்னுடன் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார். இதற்கு கட்டணமாக மாதத்திற்கு 900 கனடா டாலர்கள் வாடகை எனவும் அவர் அந்த விளம்பரத்தில் குறிப்பிட்டிருக்கிறார் .
இந்த விளம்பரம் ஃபேஸ் புக்கின் மார்க்கெட் பிளேஸில் இடம் பெற்று பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கனடாவின் டொரன்டோ நகரம் உலகின் அதிக செலவு மிக்க நகரங்களில் ஒன்றாகும். தனது மாத செலவுகளை பராமரிப்பதற்காக தன்னுடைய கிங் சைஸ் படுக்கையை பகிர்ந்து கொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.