முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இந்த நேரத்தில் உடலுறவு வைத்துக் கொள்ளலாமா..? எந்த பொசிஷன் சிறந்தது..? தம்பதிகளே தெரிஞ்சிக்கோங்க..!!

03:11 PM May 20, 2024 IST | Chella
Advertisement

கர்ப்பம் என்பது கணவன்-மனைவி, குடும்ப உறுப்பினர்கள் ஆகிய அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் காலம். அது குடும்பத்தின் மகிழ்ச்சி மட்டுமல்ல, கர்ப்பமாக இருக்கும் தாயின் மகிழ்ச்சியும் அடங்கி இருக்கிறது. ஆனால், கர்ப்பமாக இருக்கும் 9 மாதங்களுக்கு தாயை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். கர்ப்பத்தின் மகிழ்ச்சியைத் தவிர, பல தம்பதிகளுக்கு கணவன்-மனைவி 9 மாதங்கள் உடலுறவில் இருந்து விலகி இருக்க வேண்டுமா? அல்லது சேர்ந்து இருக்கலாமா? என பல கேள்விகள் உள்ளது.

Advertisement

கர்ப்பமாக இருக்கும் போது உடலுறவு கொள்ளலாமா?

கர்ப்பமாக இருக்கும் போது உடலுறவு கொள்வது தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் ஆரோக்கியமற்றது என்பது தவறான கருத்து. ஆனால், உண்மை என்னவென்றால், கர்ப்பத்தில் சிக்கல்கள் இல்லாவிட்டால், ஒரு பெண் தனக்கும் குழந்தைக்கும் பாதுகாப்பாகவும் வசதியாகவும் இருக்கும் வரை உடலுறவு வைத்துக் கொள்ளலாம். கர்ப்பத்துடன் உடலுறவு கொண்டால் உள்ளே இருக்கும் குழந்தைக்கு ஆபத்தில்லையா?உடலுறவு கொள்ள வேண்டுமென்றால், என்ன பொசிஷனில் முயற்சி செய்ய வேண்டும் போன்ற கேள்விகளுக்கான பதில்களை இப்போது தெரிந்து கொள்வோம்.

மருத்துவர்கள் சொல்வது என்ன?

கர்ப்ப காலத்தில் நீங்கள் சுதந்திரமாக உடலுறவு கொள்ளலாம். நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால், எந்த பிரச்சனையும் இல்லை என்றால், உடலுறவில் ஈடுபடலாம். உண்மையில், கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வதால் பல நன்மைகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். கணவன்-மனைவி இடையே நெருக்கம் மற்றும் உணர்ச்சி ரீதியான தொடர்பை மேம்படுத்த காதல் உதவுகிறது. மனநிலை மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துகிறது.

கர்ப்ப காலத்தில் எந்த பொசிஷன் சிறந்தது..?

நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது உடலுறவு கொள்ள விரும்பினால், சில பொசிஷன் நல்லது. தம்பதிகள் அவர்களுடைய வசதிக்கு ஏற்ப செளகரியமாக எந்த நிலையில் உடலுறவு கொள்ளலாம் என முடிவுச்செய்துக் கொள்வது நல்லது. அதுவும் கரண்டி நிலை அதாவது செக்ஸ் ஸ்பூன் பொசிஷன் தான் சரியாக இருக்கும் என மருத்துவ நிபுணர்ககள் கூறுகின்றனர். அது கர்ப்பிணிப் பெண்களுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது. இந்த போஸ் கர்ப்பிணி வயிற்றில் எந்த அழுத்தத்தையும் ஏற்படுத்தாது. அதனால் இந்த நிலைதான் சரியாக இருக்குமாம்.

செக்ஸ் உறவு கொள்வதால் கருச்சிதைவு ஏற்படுமா..?

கருவில் குழந்தையின் வளர்ச்சி சீராக இல்லை என்றால் மட்டுமே கருச்சிதைவு ஏற்படும். மாறாக, உங்கள் கணவருடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதால் ஒருபோதும் உங்களுக்கு கருச்சிதைவு ஏற்படாது. அதே சமயம், மருத்துவ சிகிச்சைகள் அடிப்படையில் கர்ப்பம் அடைந்திருந்தால், செக்ஸ் உறவை தவிர்த்துக் கொள்ளலாம். ஏனென்றால், இது போல கர்ப்பம் அடைந்த பெண்கள், செக்ஸ் உறவின் போது உச்சகட்டம் அடைந்தால், அதன் எதிரொலியாக குறைப்பிரசவம் ஏற்படக் கூடும்.

உடலுறவை எப்போது தவிர்க்க வேண்டும்

* அதிக ஆபத்துள்ள கர்ப்பம் இருந்தால், உடலுறவைத் தவிர்ப்பது நல்லது. நீங்கள் உடலுறவு கொள்ள விரும்பினால், மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகுதான் உடலுறவு வைக்க வேண்டும்.

* நஞ்சுக்கொடி பிரீவியாவால் பாதிக்கப்பட்டிருந்தால், உடலுறவைத் தவிர்க்க வேண்டும். இரத்தப்போக்கு மற்றும் குழந்தைக்கு தீங்கு விளைவிப்பதைத் தவிர்ப்பதற்காக, உடலுறவைத் தவிர்க்கலாம்.

* அடிக்கடி கருச்சிதைவு ஏற்பட்ட பெண்களும் கர்ப்ப கால செக்ஸை தவிர்க்க வேண்டும்.

* கர்ப்ப காலத்தில் லேசான ரத்தப்போக்கு இருக்கும் பெண்களுக்குக் கருச்சிதைவு ஏற்படலாம். இப்படிப்பட்ட பெண்களும் உறவைத் தவிர்ப்பதே நல்லது.

* கருப்பையில் கிருமித்தொற்று ஏற்படலாம் என்று அறிவுறுத்தப்பட்ட கர்ப்பிணிகளும் செக்ஸை தவிர்க்க வேண்டும். மற்றவர்கள் கர்ப்ப காலம் முழுவதும் செக்ஸ் வைத்துக்கொள்ளலாம்.

Read More : குளித்துவிட்டு ஈரமான முடியுடன் தூங்கினால் இவ்வளவு ஆபத்து இருக்கா..? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Advertisement
Next Article