இறந்தவருக்கு உயிர் கொடுக்க முடியுமா..? இதுவரை 500 உடல்கள்..!! அறிவியலில் காத்திருக்கும் ஆச்சர்யங்கள்..!!
மனிதன் சாகா வரம் பெற முடியுமா? என்ற அறிவியல் ஆராய்ச்சிகள் பல காலமாக நடைபெற்று வருகிறது. அதன் விளைவாகவே க்ரையோனிக்ஸ் (Cryonics) என்ற அறிவியல் முறை தற்போது வைரலாகி வருகிறது. அதாவது, ஏற்கனவே இறந்த நபரின் உடலை பதப்படுத்தி வைத்து வருங்காலத்தில் அந்த உடலை மீண்டும் உயிர்பிக்க வைக்கும் நடைமுறையே க்ரையோனிக்ஸ் ஆகும்.
கிரேக்கத்தில் இருந்து உருவான இந்த cryonics வார்த்தைக்கு "icy cold" என்பதே அர்த்தம். 1962ஆம் ஆண்டில் வெளியான 'The Prospect of Immortality' என்ற புத்தகத்தில் இறந்தவர்களை உயிர்பிக்கும் நடைமுறை பற்றி எழுதியிருக்கிறார் ராபர்ட். இதனால் இவரை cryonics முறையின் தந்தை என அழைக்கப்படுகிறார். 2011ஆம் ஆண்டில் 92 வயதான இவர் உயிரிழந்த போது மிசிகனில் இவரது உடலே cryonics முறையில் பதப்படுத்தப்பட்டது.
ஆனால், 2011இல் ராபர்ட் cryonics முறையில் பதப்படுத்தப்படுவதற்கு முன்பே, 1967இல் கல்லீரல் புற்றுநோயால் உயிரிழந்த பெட்ஃபோர்ட் என்ற நபரின் உடல் பதப்படுத்தப்பட்டது. இவரது உடல் தற்போது அரிசோனாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. cryonic நடைமுறை என்பது ஒரு நபர் இறந்த பிறகே தொடங்கப்படும். ஒரு நபர் இறந்த சில மணி நேரங்களில் உடல் ஐஸ் கட்டிகள் நிறைந்த பையில் cryonics செய்யப்படும் இடத்திற்கு கொண்டு செல்லப்படும்.
பின்னர், பிரேதத்தில் உள்ள மொத்த ரத்தமும் வெளியேற்றப்படும். இதையடுத்து, உடலில் உள்ள உறுப்புகளை பதப்படுத்துவதற்கான மருந்துகள் செலுத்தப்படும். விஞ்ஞானிகள் அந்த உடலுக்கு எப்படி உயிர் கொடுப்பது என்ற வழியை கண்டுபிடிக்கும் வரை அந்த பிரேதம் லிக்குவிட் நைட்ரோஜனால் நிறப்பப்பட்ட அரையில் பதப்படுத்தப்படும். இந்த க்ரையோனிக் முறை செய்ய பல கோடிகள் செலவாகிறது.
ஆனால், 2023 வரை சுமார் 500 நபர்கள் அல்லது பிரேதங்கள் இந்த முறைப்படி பதப்படுத்தப்பட்டுள்ளது. சிலர் தங்களுடைய முழு உடலையும் பதப்படுத்தப்படுத்தி வைக்கவும், சிலர் தங்களது தலைகளை மட்டும் பதப்படுத்தி வைக்கவும், இன்னும் சிலர் தங்களுடைய செல்லப்பிராணிகளின் உடல்களை பதப்படுத்தி வைக்கவும் விரும்புகின்றனர்.