For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மறக்கமுடியுமா அந்த கொடூரத்தை?. இன்று 20ம் ஆண்டு உலக சுனாமி தினம்!. பேரழிவில் இருந்து நாம் கற்க வேண்டியது என்ன?. விழிப்புணர்வு தொகுப்பு!

Can you forget that cruelty? Today is the 20th year of World Tsunami Day! What should we learn from the disaster? Awareness Package!
06:07 AM Nov 05, 2024 IST | Kokila
மறக்கமுடியுமா அந்த கொடூரத்தை   இன்று 20ம் ஆண்டு உலக சுனாமி தினம்   பேரழிவில் இருந்து நாம் கற்க வேண்டியது என்ன   விழிப்புணர்வு தொகுப்பு
Advertisement

World Tsunami Day2024: ஐ.நா. பொது சபை டிசம்பர் 2015-ல் நவம்பர் 5-ம் தேதியை உலக சுனாமி விழிப்புணர்வு தினமாக அறிவித்தது.

Advertisement

2004ம் ஆண்டு இந்தியாவை உலுக்கிய சுனாமியை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிடவே முடியாது. அதன் ரணங்களில் இருந்து இருபது ஆண்டுகளை நெருங்கிய வேளையிலும் மீளவே முடியவில்லை என்பதுதான் உண்மை. பல நாடுகளை தாக்கி, பல லட்சம் உயிர்களை கொள்ளைகொண்ட சுனாமி என்ற பெயர் நமக்கு அப்போது மிகவும் புதியது. இந்திய பெருங்கடலையே ஸ்தம்பிக்க வைத்த மகா யுத்தம் என்றே அதை கூறலாம்.

அந்த பேரழிவில் மில்லியன் கணக்கான இறப்புகள் நிகழ்ந்தன, மேலும் 14 நாடுகள் சுனாமியால் பாதிக்கப்பட்டன. அதில் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடு தாய்லாந்து ஆகும். இலங்கை, இந்தோனேசியா மற்றும் இந்தியாவில் மட்டும் 2,27,000 பேர் இறந்ததாக ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது. இதுகுறித்த விழிப்புணர்வை பரப்பும் முயற்சியாக, டிசம்பர் 2015 இல் ஐநா பொதுச் சபை (UNGA) நவம்பர் 5ம் தேதியை உலக சுனாமி விழிப்புணர்வு தினமாக அறிவித்தது. அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

நீரோட்டம் மாறுவதால் ஏற்படும் தொடர் ராட்சத அலைகள் சுனாமி என்று அழைக்கப்படுகிறது. இது கடல் மற்றும் பெருங்கடல் போன்ற மிகப்பெரிய அளவிலான நீர் நிலைகளில் ஏற்படுகிறது. எனவே சுனாமி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகவும் அவசியமாகிறது. இந்த இயற்கை பேரழிவின் ஆபத்துக்களை கூறி, மக்கள் தங்களையும், தங்கள் உறவினர்களையும் காத்துக்கொள்வதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கம்.

இந்த இயற்கை பேரழிவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாள் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகிறது. இந்தாண்டு இந்த நாளை கடைபிடிக்கும் வேளையில் நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன என்று தெரிந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு ஆண்டும் சுனாமி விழிப்புணர்வு நாள் நவம்பர் 5ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்தாண்டு அந்த நாள் ஞாயிற்றுக்கிழமை, அதாவது இன்று கடைபிடிக்கப்படுகிறது.

வரலாறு: ஜப்பான் மொழியில், இன்அம்யூரா-நோ-ஹி என்பதன் பொருள், வைக்கோல்களை எரிப்பது என்பதாகும். 1854ம் ஆண்டு நிலநடுக்கம் ஏற்பட்டபோது, ஒரு விவசாயி ஒரு பேரலை வருவதை பார்த்தார். அது சுனாமி வருவதற்கான தெளிவான அறிகுறியாகும். அவர் பின்னர் தான் அறுவடை செய்த பயிர்களை எரித்து, கிராம மக்களுக்கு அந்த பேரிடர் குறித்து அறிவுறுத்தினார். ஜப்பானின் இந்த கதையை பெருமைப்படுத்தும் வகையில், நவம்பர் 5ம் தேதி, உலக சுனாமி தினம் கடைபிடிக்கப்படுகிறது.

உலக சுனாமி விழிப்புணர்வு தினம் ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு கருப்பொருள்களைக் கொண்டுள்ளது. அந்தவகையில், 2024 ஆம் ஆண்டிற்கான 'தாழ்த்தக்கூடிய எதிர்காலத்திற்கான சமத்துவமின்மையை எதிர்த்துப் போராடுதல்' என்ற கருப்பொருள் பேரழிவுகளின் சமமற்ற விளைவுகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களை ஆதரிப்பதன் முக்கியத்துவத்தின் மீது கவனம் செலுத்துகிறது.

Readmore: அதிர்ச்சி!. போட்டியின்போது மின்னல் தாக்கிய கால்பந்து வீரர் உயிரிழப்பு!. பகீர் வீடியோ!

Tags :
Advertisement