நாய் கடித்தால் மாமிசம் சாப்பிடலாமா?
நாய் கடித்துவிட்டால் NonVeg சாப்பிடக்கூடாது என்று சொல்வார்கள். அதேபோல பத்தியம் இருக்க வேண்டும் என்றும் கூறுவார்கள். உண்மையிலேயே NonVeg சாப்பிடலாமா என்பது குறித்து தெரிந்துகொள்ளலாம்.
தடுப்பூசி அவசியம்: நாய் வளர்க்கும்போது அது நம்மை கடித்து விட்டால் உடனே மருத்துவ ஆலாசனையுடன் சிகிச்சையை பெற்றுக்கொள்ள வேண்டும்.ரேபிஸ் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். அதாவது, நாய் கடித்த நாள் , மூன்றாவது நாள், ஏழாவது நாள் என 28வது நாட்களுக்குள் தடுப்பூசி போடப்பட வேண்டும்.இந்த தடுப்பூசி போட்டபின் நாம் உண்ணும் உணவிற்கும் தடுப்பூசிக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை. நாம் மாமிச உணவுகளை சாப்பிடலாம்.
ரத்ததானம் வழங்க கூடாது: தடுப்பூசி போட்ட ஒரு வருட காலம் வரை ரத்த தானம் செய்ய கூடாது. இந்த ரத்த தானம் நாய் கடித்தால் மட்டுமல்ல பூனை பராண்டினால் கூட போட்டுக்கொள்ள வேண்டும்.இது போடாமல் இருந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து கொண்டே செல்லும். இது தவிர ஆறாத காயங்களில் விலங்குகள் நக்கிவிட்டாலும் தடுப்பூசி போடுதல் கட்டாயமாகும்.
Read More: மாரடைப்பால் உயிரிழந்த 6 வயது குழந்தை! கொடூர தந்தையால் நடந்த விபரீதம்.. நடந்தது என்ன?