மழைக்காலத்தில் குளிரை போக்க சரக்கு அடிக்கலாமா? - மருத்துவர்கள் விளக்கம் இதோ..
குளிர்காலத்தில் அதிகமாக குளிராமல் இருக்க மது அருந்துவதை சிலர் வழக்கமாக கொண்டுள்ளனர். மது அருந்துவது குளிரைத் தவிர்த்து கதகதப்பைத் தருவதாகவும் நம்பப்படுகிறது. ஆல்கஹால் உடலை சூடாக வைக்கிறது. ஆனால் இது குளிர்கால நோய்களைக் குணப்படுத்துகிறது என்ற கூற்று முற்றிலும் ஆதாரமற்றது. ஏனென்றால், மதுபானம் உடலுக்கு எல்லா வகையிலும் தீங்கு விளைவிக்கும் என்று மருத்துவர்கள் கூட கூறுகிறார்கள். இதுகுறித்து பொது மருத்துவர் பாபு கூறிய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
அவர் கூறுகையில், "பொதுவாக, குளிர்காலத்தில் உடலில் உள்ள ரத்தக்குழாய்கள் சற்று சுருங்கும். இவ்வாறு சுருங்குவதன் மூலம் வெளிப்புறத்தின் குளிர் உடலை பாதிக்காத வகையில் அதுவே பாதுகாக்கும். மது அருந்தும்போது சிறிது நேரம் உடல் வெப்பமாக இருப்பது போன்ற மாயையை உருவாக்கும். உண்மையில் ரத்தக்குழாய்கள் விரிவடைவதால் உடலில் இருந்து அதிக வெப்பம் வேகமாக வெளியேறத் தொடங்கும். இது உடலின் வெப்பநிலையை மேலும் குறைத்து உடலுக்குத் தீங்கு விளைவிக்க வாய்ப்புள்ளது. குளிர்காலத்தில் மது அருந்துவது என்பது உடலுக்கு கூடுதல் தீங்கையே விளைவிக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
பியர், ஒயின் போன்றவற்றில் ஆல்கஹால் அளவு குறைவாக இருந்தாலும் அவை மது வகைகள் என்பதில் மாற்றமில்லை. எனவே, அவற்றால் உடலுக்குத் தீங்கு இல்லை எனச் சொல்லிவிட முடியாது. ஆல்கஹால் குறைவாக இருந்தாலும் அருந்தும் அளவு மிக அதிகமாக இருப்பதால் உடல்நலத்தை பாதிக்கவே செய்யும்” எனக் கூறினார்.
குறிப்பாக பிராந்தி மற்றும் ரம் போன்ற மது வகைகள் சளி, இருமல் மற்றும் மூட்டு வலி போன்றவற்றை குணப்படுத்தும் என நம்பப்படுகிறது. இதனுடன் இதயம் தொடர்பான நோய்களில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும் என கூறப்படுகிறது. சிலர் இது சுவாச பிரச்சனைகளை விடுவிக்கிறது என்று கூறுகிறார்கள். ஆல்கஹாலின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அவற்றை குணப்படுத்த உதவுவதாக கூறப்படுகிறது.
அறிவியலின் படி, ஆல்கஹால் உடலை சூடாக வைக்கிறது. அதாவது, மது அருந்திய பிறகு, அது உடலின் வெப்பத்தை இன்னும் அதிகமாக்குகிறது. ஆனால் இது நோய்களைக் குணப்படுத்துகிறது என்ற கூற்று முற்றிலும் ஆதாரமற்றது. ஏனென்றால், மதுபானம் உடலுக்கு எல்லா வகையிலும் தீங்கு விளைவிக்கும் என்று மருத்துவர்கள் கூட கூறுகிறார்கள். ரம், பிராந்தி, எந்த பிராண்டாக இருந்தாலும் சரி... படிப்படியாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது. தற்போதுள்ள நோய்களை குணப்படுத்தாவிட்டால், புதிய நோய்கள் உருவாகும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
Read more ; பூமியின் மையத்தில் இப்படி ஒரு நாடா? மக்களின் சுவாரஸியமான வாழ்க்கையும்.. விலகாத மர்மமும்..