6,666 அடி உயரம்.. மலை ஒரு புறம்.. பனி ஒரு புறம்.. பிரம்மிக்க வைக்கும் இரயில் பயணம்..!! எங்க இருக்கு தெரியுமா?
ரயில் பயணங்கள் நம் வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. ஏதாவது ஒரு வகையில் ரயிலில் நாம் பயணித்திருப்போம். ரயில்களில் ஊர் விட்டு ஊர் செல்வதற்கு விரைவு ரயில்களே ஒரே வழி. தமிழகத்தில் கம்பன், பொதிகை, வைகை நாகர்கோயில் விரைவு வண்டிகளும், இந்தியா முழுவதும் வேகம் என கூறிக்கொள்ளும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களும் நாம் அறிந்ததே..
இப்படி வேகத்துக்கு பெயர் போன எக்ஸ்பிரஸ் ரயில்கள் இருக்கும் இதே உலகில், வேகமில்லா எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா.. ஒரு மணிநேரத்திற்கு 36கிமீ மட்டுமே பயணிக்கும் ரயில் தான் GLACIER EXPRESS.. 1930ம் ஆண்டு ஜூன் மாதம் 25ம் தேதி, ஸ்விட்சர்லாந்தின் இரு பெரிய மலை ஹோட்டல்களை செர்மாட் மற்றும் புனித மார்டிஸ்-ஐ இணைக்க துவங்கப்பட்டாதே இந்த GLACIER EXPRESS ரயில் பாதை.
இது 6,666 அடி உயரமான பாலத்தில் பயணித்து MATTERHORN, THE RHINE GORGE, OBERALP PASS உட்பட்ட அழகிய மலை தொடர்களையும், பனி பொழிவையும் காணுவதற்க்காகவே இந்த ரயிலில், அகண்ட ஜன்னல்கள், என காண்போரை கண்களை கவரும் வகையில் இந்த ரயிலானது வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற காட்சிகளை காண்பதற்க்காகவே சிறப்பாக வடிவமைக்கப்பட இந்த ரயில் மணிக்கு 36 கிமீ மட்டுமே பயணிக்கிறது. ஆரம்பக்காலக்கட்டத்தில் அடிப்படை வசதிகளுடன் இயக்கப்பட்ட இந்த ரயில்..
சுற்றுலா பயணிகளின் வருகையின்பொருட்டு அதிநவீன வசதிகளுடன் டெவெலப் ஆனது. ஆர்டர் செய்யும் உணவு ரயில் உள்ளேயே தயாரிக்கப்படு சூடாக விநியோகம் செய்யப்படுகிறது. இந்த ரயிலுக்கு டிமான்ட் அதிகமாக இருப்பதால் குறைந்தது ஆறு மாதம் முன்னதாக இந்த ரயிகலுக்கு முன்பதிவு செய்திருக்க வேண்டும் என ஸ்விஸ் ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் எப்பொழுதாவது இந்த ரயிலில் பயணிக்க நேரிட்டால்.. இதன் வரலாற்றை நினைவுகூறுங்கள்..
Read more ; பாரா ஒலிம்பிக்!. ஒரே நாளில் 3 பதக்கம்!. தடகளத்தில் இந்தியாவின் ப்ரீத்தி பால் வெண்கலம் வென்றார்!