முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

புதிய ஆடைகளை அணிவதற்கு முன்பு துவைக்கலாமா?… சாயம் போகாமல் துவைப்பது எப்படி?… நிபுணர்கள் கூறுவது என்ன?

04:20 PM Dec 02, 2023 IST | 1newsnationuser3
Advertisement

புதிய ஆடைகளை அணிவதற்கு முன்பு அவற்றை துவைப்பது நல்லது. இதற்கான முக்கிய காரணம், ஆடைகளில் இரசாயனங்கள் அதிகளவு இருக்கலாம், இவை தீங்கு விளைவிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

Advertisement

ஏதேனும் விசேஷ நாட்கள் வந்தால் மட்டுமே அதனை எடுத்து பயன்படுத்துவோம். இப்படி புதிய துணிகளை பாதுகாப்பாக பார்த்து கொள்ளும் முன்பு, அவற்றில் சாயம் போகாமல் இருப்பதும் அவசியம். புது துணிகளில் சாயம் போவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. இந்த குறிப்பிட்ட பிரச்சனையின் கோபத்தை நாம் அனைவரும் நம் வாழ்வில் ஒரு முறையாவது சந்தித்திருக்கிறோம். இதை விட பெரிய வலி எதுவும் இல்லை என்று எளிதாக சொல்லலாம். எனவே, துவைக்கும் முன்பு சில விஷயங்களை பின்பற்றுவது நல்லது.

புது துணிகளை துவைக்கும் முன், உள்ளே திருப்பி துவைக்கவும். இப்படி திருப்புவது, துவைக்கும் போது அவற்றை பாதுகாக்கும் மற்றும் நீண்ட நாட்கள் புதியதாக இருக்கும். இது துணியிலிருந்து சாயம் வெளியேறுவதைத் தடுக்கிறது. ஜீன்ஸ், சட்டை, டீ சர்ட் மங்காமல் தடுக்க இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், புதிய ஜீன்ஸ் பேண்ட்களை அதிக நேரம் வெயிலில் போடுவதை தவிர்க்கவும். புதிய துணிகள் எவ்வளவு அதிகமாக துவைக்கப்படுகிறதோ அவ்வளவு வேகமாக மங்கிவிடும். சுகாதாரத்திற்காக அடிக்கடி துணிகளை துவைப்பதன் முக்கியத்துவத்தை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம், ஆனால் துணிகளை அடிக்கடி துவைப்பது அவற்றை பழையதாக மாற்றும்.

முடிந்தவரை புதிய துணிகளை தனியாக துவையுங்கள். ஏனெனில், மற்ற ஆடைகளுடன் சேர்த்து துவைக்கும் போது, அதில் இருக்கும் வண்ணங்கள் கூட ஒட்டிக்கொள்ளும் அபாயம் உள்ளது. இதனால், அவற்றை அடுத்தமுறை பயன்படுத்த முடியாமலும், போகலாம். துணிகளை துவைக்க சரியான சோப்பு பயன்படுத்துவது அவசியம். வாஷிங் மிஷினில் துணிகளை துவைத்தால், சரியான சோப்பு பவுடர் அல்லது லிக்குவிட் பயன்படுத்துவது அவசியம். மேலும், துணிகளை நேரடி சூரிய ஒளியில் படும்படி காயவைத்தால், அவற்றின் வண்ணங்கள் எளிதில் வெளுத்துவிடும். உங்கள் ஆடைகளை நிழலில் வைப்பது ஆடைகள் மங்காமல் தடுக்க உதவும். அதிக வண்ணங்கள் இருக்கும் துணிகளை தனியாகவே துவையுங்கள். எவ்வளவு விலை கொடுத்து துணிகளை வாங்கி இருந்தாலும், முதல் சலவையில் அவற்றில் இருந்து வண்ணங்கள் மற்ற துணிகளில் ஒட்டி கொள்ளும்.

வினிகர்: சமயலறையில் இருக்கும் பொதுவான பொருள் வினிகர். துணிகளை துவைக்கும் முன்பு, ​​ஒரு கப் வினிகரை சேர்க்கவும், இது துணிகளில் நிறங்களை அப்படியே வைத்திருக்க உதவும். மேலும் துவைக்கும் போது உப்பு சேர்ப்பதும் துணிகளுக்கு உதவும். குளிர்ந்த நீர்: வாஷிங் மிஷினில் புதிய துணிகளை போடும் முன், அவற்றை 15 நிமிடங்கள் குளிர்ந்த நீரில் தனித்தனியாக ஊற வைத்து துவைக்கவும். இது வண்ணங்கள் மங்காமல் இருக்க உதவுகிறது. ட்ரையர்: முடிந்த வரை ட்ரையர் பயன்படுத்துவதை தவிர்த்து, கையில் புழிந்து காயவைக்கவும். இவை துணிகளை நீண்ட நாட்கள் சாயம் போகாமல் பார்த்து கொள்ளும்.

Tags :
clotheswashஅணிவதற்கு முன்பு துவைக்கலாமா?சாயம்நிபுணர்கள்புதிய ஆடை
Advertisement
Next Article