உங்கள் குழந்தைகளுக்கு, காலை உணவாக பாலும் பழமும் கொடுக்கலாமா??? கட்டாயம் தெரிந்துக் கொள்ளுங்கள்..
பல நேரங்களில், ஆரோக்கியமான உணவுகள் கூட விஷமாகி விடும். இதற்க்கு காரணம், நாம் அந்த உணவோடு எதை சாப்பிடுகிறோம் என்பதை பொறுத்து தான். அந்த வகையில், நம் உணவு முறைகள் குறித்து ஆயுர்வேதம் பல விஷயங்களை தெளிவுபடுத்தியுள்ளது. அப்படி, ஒரு சில உணவுகளை நாம் அசைவ உணவுகளுடன் சேர்த்து மறந்தும் சாப்பிடக் கூடாது. அப்படி நாம் சாப்பிடும் போது, அது பல பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை செய்கின்றனர். அந்த வகையில், நாம் சேர்த்து சாப்பிடக் கூடாத உணவுகள் என்ன என்பதை குறித்து இந்த பதிவில் விரிவாக காணலாம்.
பொதுவாக, பால் சார்ந்த உணவு பொருள்களுடன் அசைவ உணவை சாப்பிடக்கூடாது. மேலும், பாலுடன் சாக்லேட், உருளைக்கிழங்கு, பீன்ஸ் போன்றவையும் கட்டாயம் சாப்பிடக்கூடாது. மட்டன், பால் இரண்டையும் ஒரே நாளில் சாப்பிடுவது வயிற்றில் பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும். மட்டன் சாப்பிட்ட பின் பால் குடித்தால் வயிற்றில் வீக்கம், மந்தம், வாயு, அசிடிட்டி ஆகிய பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. மேலும், லாக்டோஸ் சகிப்புத்தன்மை பிரச்சனை தலைதூக்கி உணவு விஷமாக (food poison) வாய்ப்பு உள்ளது.
பொதுவாக, நமது பிள்ளைகள் காலையில் சாப்பிட நேரம் ஆகிவிட்டால், உடனே தாய்மார்கள் வாழைப் பழத்தையும், பாலையும் கொடுப்பது உண்டு. ஆனால், அது முற்றிலும் தவறு. இவ்வாறு சாப்பிடுவதால் செரிமான கோளாறு ஏற்படுவதுடன், நெஞ்செரிச்சல், வயிறு உப்புசம் போன்றவை ஏற்படும் வாய்ப்புள்ளது. காய்கறிகள் என்றாலே அதிக சத்துள்ளது தான். அதிலும் குறிப்பாக பீன்ஸ், உடலுக்கு தேவையான பல சத்துக்களை கொடுக்கும். ஆனால் பீன்ஸ் சாப்பிடும் போது அசைவ உணவுகளான சிக்கன், பீப், மட்டன், முட்டை, மீன் போன்றவை சாப்பிடவே கூடாது.
Read more: ஸ்வெட்டர், சாக்ஸ் அணிந்து தூங்கவே கூடாது… ஏன் தெரியுமா? கட்டாயம் தெரிந்துக் கொள்ளுங்கள்..