For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

’இந்த மாதிரி கூட விவாகரத்து கொடுக்கலாமா’..? நீதிமன்ற தீர்ப்பால் அதிர்ச்சி..!!

11:41 AM Apr 20, 2024 IST | Chella
’இந்த மாதிரி கூட விவாகரத்து கொடுக்கலாமா’    நீதிமன்ற தீர்ப்பால் அதிர்ச்சி
Advertisement

வழக்கறிஞர் ஒருவர் கணினியில் தவறாக ஒரு க்ளிக் செய்ததால், தவறுதலாக ஒரு தம்பதிக்கு விவாகரத்து வழங்கப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

Advertisement

சில நாடுகளில் விவாகரத்து வழக்குகளுக்கு ஆன்லைன் மூலமாகவே விசாரித்து தீர்ப்புகள் வழங்கப்படும். லண்டனை சேர்ந்த திரு மற்றும் திருமதி வில்லியம்ஸ் என்ற தம்பதி 21 ஆண்டு மண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து பெற விண்ணப்பித்திருந்தனர். இருவருக்கும் நிதி தொடர்பான விவகாரங்கள் இழுபறியில் இருந்ததால் வழக்கு தொடர்ந்து வந்தது. மற்றொருபுறம் வேறொரு தம்பதியும் விவாரத்துக்காக விண்ணப்பித்திருந்தனர். அவர்களது விவாகரத்துக்காக ஆன்லைன் போர்ட்டலில் விண்ணப்பிக்க வேண்டியிருந்தது.

இந்நிலையில், ஒரு வழக்கறிஞர் இந்த தம்பதிக்கு விண்ணப்பிப்பதற்கு பதிலாக ஆன்லைனில் வில்லியம்ஸ் தம்பதியின் கணக்கை க்ளிக் செய்ததால் அது நீதிமன்ற விசாரணைக்குச் சென்றுவிட்டது. நீதிமன்றம் வழக்கை விசாரித்து 21 நிமிடங்களில் தவறுதலாக விவாகரத்து உத்தரவை வழங்கிவிட்டது. இதுகுறித்து, குடும்ப நலப் பிரிவு நீதிபதியான சர் ஆண்ட்ரூ மெக்ஃபார்லேன் கூறுகையில், "வழக்கறிஞர்கள் விவாகரத்துக்கு விண்ணப்பிக்க வேண்டிய வழக்கு கோப்பை திறப்பதற்கு பதிலாக வில்லியம் தம்பதியின் கோப்பைத் திறந்து, அந்த வழக்கில் இறுதி உத்தரவுக்கு விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் விண்ணப்பித்த வழக்குக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது" என்றார்.

தாங்கள் செய்த தவறை 2 நாள்களுக்குப் பிறகு கண்டறிந்த வழக்கறிஞர்கள், வில்லியம்ஸ் தம்பதி வழக்கில் வழங்கப்பட்ட இறுதி விவாகரத்து உத்தரவை ரத்து செய்யக் கோரி, உயர்நீதிமன்றத்தை அணுகினர். அப்போது, வழக்கறிஞர் தவறான பட்டனை க்ளிக் செய்ததால், வேறு வழக்குக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்த உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என வாதிட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, "இந்த இறுதி விவாகரத்து உத்தரவில் மாற்றம் செய்வது மக்களுக்கு நீதியின் மேல் உள்ள நம்பகத்தன்மை மற்றும் உறுதித்தன்மையைக் குறைத்துவிடும். ஆன்லைன் விவாகரத்து விவகாரங்களில் தவறான பட்டனை க்ளிக் செய்வதன் மூலம் விரும்பத்தகாத விவாகரத்து கிடைக்க வாய்ப்புள்ளது என்ற என்ற எண்ணத்தையும் உடனடியாக சரி செய்வது அவசியம் என்று கூறி, வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

விவாகரத்து வாங்கிக் கொடுக்க அதிக ஊதியம் பெறும் வழக்கறிஞரான வர்டாக் இதுகுறித்து தெரிவிக்கையில், "நீதிபதி ஒரு மோசமான முடிவை எடுத்திருக்கிறார். ஒரு தவறு நடைபெற்றுள்ளது குறித்து நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதனை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, அந்தத் தவறை சரி செய்ய முயற்சிக்க வேண்டும். நீதிமன்றத்தின் இந்தச் செயல் சரியானதல்ல. இங்கு வழங்கப்பட்டுள்ளது நீதியே அல்ல" என்று தெரிவித்துள்ளார்.

Read More : காலை உணவுக்கு அரிசி சாதம் சாப்பிடலாமா..? இவர்கள் சாப்பிடவே கூடாதாமே..!!

Advertisement