For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இந்த சமயத்தில் கோழி இறைச்சி, முட்டை சாப்பிடலாமா..? மருத்துவ நிபுணர்கள் சொல்வது என்ன..?

07:47 AM Apr 23, 2024 IST | Chella
இந்த சமயத்தில் கோழி இறைச்சி  முட்டை சாப்பிடலாமா    மருத்துவ நிபுணர்கள் சொல்வது என்ன
Advertisement

கேரளாவில் பறவை காய்ச்சல் பீதி அதிகரித்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டிலும் காய்ச்சல் பரவாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பறவை காய்ச்சல் பீதியால் கோழி விற்பனை சற்றே குறைந்திருப்பதாக வியாபாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

Advertisement

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள சில கோழி மற்றும் வாத்து பண்ணைகளில் பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், அங்கு உச்சபட்ச கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் கேரளா சென்று வரும் நிலையில், தமிழ்நாட்டிலும் நோய் தொற்று பரவாமல் இருக்க தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதே சமயம், பறவை காய்ச்சல் பாதிப்பு குறித்து செய்திகள் வெளிவந்த வண்ணம் இருப்பதால், கோழி நுகர்வோர் சற்றே பயத்தில் உள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கோழி விற்பனை சரிந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கோழிகளை சாப்பிடுவதாலும், முட்டைகள் சாப்பிடுவதாலும் பறவை காய்ச்சல் பரவுமா என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர். பொதுவாக கோழிகளையும் முட்டைகளையும் உயர் வெப்ப நிலையில் சமைப்பதால் அதில் உள்ள வைரஸ் உள்ளிட்ட நுண்ணுயிர்கள் மடிந்து விடும்.

கோழி இறைச்சியை நன்கு சமைத்து சாப்பிடும் போது பறவை காய்ச்சல் வருவதற்கான வாய்ப்பில்லை. அதே நேரத்தில் கோழி பண்ணைகளில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் அருகில் வசிப்பவர்களுக்கு காய்ச்சல் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. மேலும், முட்டைகளை பச்சையாக எடுத்துக் கொள்வதும் காய்ச்சல் பரவுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்” என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

Read More : உங்களுக்கு பறவைக் காய்ச்சலா..? இந்த அறிகுறிகள் இருக்கா..? உடனே மருத்துவமனைக்கு போங்க..!!

Advertisement