முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

IPL பார்க்க செல்பவர்கள் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாமா..? தமிழ்நாடு அரசு பரபரப்பு விளக்கம்..!!

04:27 PM Mar 23, 2024 IST | 1newsnationuser6
Advertisement

ஐ.பி.எல். போட்டிகளைக் காண வருபவர்கள், மாநகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் என்ற செய்தி தவறாகத் திரிக்கப்பட்டிருப்பதாகவும் இது அரசின் செலவல்ல என்றும் தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம் அளித்துள்ளது.

Advertisement

ஐ.பி.எல். போட்டிகளைக் காண வருபவர்கள், தங்களது இணைய டிக்கெட்டை காட்டி மாநகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் என தமிழக போக்குவரத்து கழகம் அறிவித்தாக நேற்று செய்திகள் வெளிவந்தன. மேலும், போட்டி நடைபெறும் 3 மணி நேரத்திற்கு முன்பும், போட்டி முடிந்து 3 மணிநேரத்திற்கும் பின்பும் சேப்பாக்கத்தில் இருந்து பிற இடங்களுக்கு பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம். ஏ.சி பேருந்துகளில் இந்த சலுகை இல்லை என்று அறிவிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

ஆனால், இதை தமிழக போக்குவரத்து கழகம் முற்றிலும் மறுத்துள்ளது. இதுகுறித்து அரசு சார்பில் வெளியான அறிவிப்பில், “அந்தச் செய்தி தவறாகத் திரிக்கப்பட்டதே!
சேப்பாக்கத்தில் நடக்கும் போட்டிகளைக் காண வருபவர்களுக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் அரசு செலவில் இலவசப் பேருந்து சேவை வழங்கவில்லை. போக்குவரத்து கழகத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள சிஎஸ்கே அணி நிர்வாகம் பயணச்செலவை போக்குவரத்துத் துறைக்கு செலுத்தி விட்டனர்.

கடந்த வருடம் நடந்த ஐபிஎல் போட்டிகளிலும் சிஎஸ்கே அணி நிர்வாகம் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்துடன் இணைந்து டிக்கெட் வைத்திருந்த ரசிகர்களுக்கு மட்டும் இலவச மெட்ரோ பயண சேவை அறிவித்திருந்தது” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : ‘ஒருவேளை தேர்தலில் வெற்றி பெற்றால் என் இதயமே நின்றுவிடும்’..!! தேர்தல் மன்னன் பத்மராஜன் பரபரப்பு பேட்டி..!!

Advertisement
Next Article