முஸ்லிம்களும் ராமர் கோயிலுக்கு போலாமா.? மாற்று மதத்தினர் ராமர் கோவில் செல்ல அனுமதி இருக்கிறதா.?
நூற்றாண்டு கனவான ராமர் கோவில் கும்பாபிஷேக விழா மற்றும் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு உத்திர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி ஸ்ரீராமரின் குழந்தை பருவ சிலையை பிரதிஷ்டை செய்தார். இந்த நிகழ்வில் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உட்பட அரசியல் கட்சித் தலைவர்கள் சினிமா துறையினர் விளையாட்டு வீரர்கள் மற்றும் மத குருமார்கள் என ஏராளமான ஒரு கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நேற்றும் இன்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு மட்டுமே ராமர் கோவில் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் நாளை முதல் பொதுமக்களும் ராமர் கோவிலை தரிசிக்கலாம் என ராமஜென்ம பூமி அறக்கட்டளை தெரிவித்து இருக்கிறது. 500 ஆண்டுகால காத்திருப்பிற்கு கிடைத்த வெற்றி என கும்பாபிஷேக விழாவின் போது பேசிய பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். நீண்ட வனவாசத்திற்கு பிறகு தனது சொந்த வீட்டிற்கு ஸ்ரீ ராமர் திரும்பி இருக்கிறார் எனவும் அவர் கூறினார். இந்தியாவில் இருக்கும் புகழ் பெற்ற வழிபாட்டு தலங்களில் ராமர் கோவிலும் இணைந்து இருக்கிறது.
ராமர் கோவில் ஹிந்துக்களின் புனித தளம் என்பதால் கோவிலை தரிசிக்கவும் பார்வையிடுவதற்கு இஸ்லாமியர்கள் உட்பட மற்ற மதத்தினருக்கு அனுமதி இல்லை என்று சிலர் கூறி வருகின்றனர். ஆனால் எல்லா மதத்தினரும் ராமர் கோவிலுக்கு சென்று பார்வையிடலாம் மேலும் ராமர் கோவிலை பராமரித்து வரும் ராமஜென்ம பூமி அறக்கட்டளையும் பிற மதங்களை பின்பற்றும் நபர்கள் ராமர் கோவிலுக்கு வரக்கூடாது என எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
மேலும் ராமர் கும்பாபிஷேக விழாவில் பேசிய பிரதமர் மோடி ஸ்ரீ ராமர் இந்தியாவின் பிரச்சனை இல்லை அவர் இந்தியாவிற்கான தீர்வு என தெரிவித்திருந்தார். மேலும் ராமர் கோவில் திறப்பு விழா மற்றும் கும்பாபிஷேக நிகழ்விற்கு பிற மதங்களைச் சேர்ந்த தலைவர்களும் பிற மதத்தைச் சார்ந்தவர்களும் அழைக்கப்பட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது . ராமர் கோவில் இந்து மதத்தின் அடையாளமாக இருந்தாலும் அது இந்தியாவின் அடையாளம் என பாரதப் பிரதமர் மோடி தனது உரையில் தெரிவித்திருந்தார். இதனால் இஸ்லாமியர்கள் உட்பட எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும் ராமர் கோவிலை பார்வையிடவும் தரிசிக்கவும் அனுமதி இருக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.