Election 2024 | நெல்லையில் பலிக்குமா பாஜக கனவு.? சாதிப்பாரா மண்ணின் மைந்தன்.? கள நிலவரம்.!
2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தமிழக முற்படா பல பகுதிகளிலும் நடைபெற இருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. தொகுதி பொங்கிடு மற்றும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் கட்சிகளும் வேட்பாளர்களும் வாக்கு சேகரிப்பு பணியை தொடங்கி இருக்கின்றனர்.
திமுக அதிமுக மற்றும் பாஜக கூட்டணி என அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சி ஒரு தொகுதியில் ஆவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் அந்த கட்சி அதிமுகவுடன் இணைந்து பயணித்ததால் தேர்தலில் ஓரளவு வாக்கு வீதத்தை பெற்றதாக அரசியல் விமர்சிகர்கள் தெரிவித்தனர்.
தற்போது பாரதிய ஜனதா கட்சி அதன் தலைமையில் கூட்டணி அமைத்து இந்தப் பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்கிறது. தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடும் மண்ணின் மைந்தர் நையினார் நாகேந்திரன் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் அரசியல் அனுபவம் மிக்கவராகவும் மக்களுக்கு நன்றாக அறிமுகமானவராகவும் இருக்கிறார்.
இதனால் பாரதிய ஜனதா கட்சி திருநெல்வேலி தொகுதியில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக பல அரசியல் விமர்சிகர்களும் தங்களது கருத்தை பதிவு செய்துள்ளனர். இந்த வருட பாராளுமன்ற தேர்தலில் திமுக திருநெல்வேலி தொகுதியை கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு கொடுத்திருக்கிறது. இந்தத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ராபர்ட் ப்ரூஸ் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார் .
இவர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்தவராக இருப்பதோடு மக்கள் மத்தியில் அறியப்படாத முகமாகவும் இருப்பதால் இது காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணிக்கு சிறிது பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் அதிமுக கட்சியின் சார்பாக ஜான்சி ராணி என்பவர் திருநெல்வேலி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்கும் மக்களிடம் செல்வாக்கு இருப்பதாக தெரியவில்லை.
ஆனால் மறுபுறம் பாரதிய ஜனதா கட்சியின் நயினார் நாகேந்திரனைப் பொருத்தவரை திருநெல்வேலி மக்களால் நன்கு அறியப்பட்ட முகம். இவர் 2001 ஆம் ஆண்டு முதல் முதலாக திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். பின்னர் 2006 ஆம் ஆண்டு திருநெல்வேலி தொகுதியில் தோல்வி கண்ட இவர் 2011 ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார். 2016 ஆம் வருட சட்டமன்றத் தேர்தலில் திருநெல்வேலியில் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
பின்னர் அதிமுகவில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த இவர் 2021 ஆம் வருடம் அதிமுக பாஜக கூட்டணியில் திருநெல்வேலி போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றார் . இதுவரை சந்தித்த தேர்தல்களில் 40 முதல் 50 சதவீதம் வாக்குகள் பற்றி நையினார் நாகேந்திரன் வெற்றி பெற்றிருக்கிறார். மேலும் கடந்த காலங்களில் பாஜக அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது. தற்போது தனித்துப் போட்டியிடுவதால் அந்த அளவு ஆதரவு கிடைக்கும் என்று கூற முடியாது.
ஆனால் காங்கிரஸ் மற்றும் அதிமுக கட்சிகள் அறிமுகம் இல்லாத வேட்பாளரை களத்தில் நிறுத்தி இருப்பது பாரதிய ஜனதா கட்சிக்கு சாதகமாக அமைந்திருக்கிறது என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன . எனினும் தென் மாவட்ட மக்கள் பாஜகவை ஒதுக்கி வைத்தே பழக்கப்பட்டவர்கள் என்பதால் கை மற்றும் இரட்டை இலைக்கும் வாய்ப்பிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.