முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அட இந்த நோய்களை கூட வாழை இலை சரி செய்யுதா..? இதன் மருத்துவ பயன்களை தெரிஞ்சிக்கோங்க..!!

As far as banana is concerned, everything from the stem to the leaf has medicinal properties.
05:30 AM Nov 08, 2024 IST | Chella
Advertisement

வாழையை பொறுத்தவரை தண்டு முதல் இலை வரை அத்தனையும் மருத்துவ குணங்கள் கொண்டது. இந்த வாழையிலையில் பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், சோடியம், பாஸ்பரஸ், துத்தநாகம், செம்பு உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. கண்கள் உட்பட உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. பசும் இலையாக இருந்தாலும் சரி, இலை அறுபட்ட பிறகும் கூட, எப்போதுமே குளிர்ச்சியாக இருக்கக்கூடியது வாழையிலை. வாழை இலை ஆக்சிஜனை வெளியிட்டுக்கொண்டே இருக்குமாம். அதனால்தான், வாழை இலையில் வைக்கப்படும் கீரைகள், காய்கள், பழங்கள், பூக்கள் போன்றவை சீக்கரத்தில் வாடிப்போகாது.

Advertisement

கண்களுக்கு குளிர்ச்சி தரக்கூடிய வாழை, எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வது, வைட்டமின் A, C, K போன்றவை உள்ளதால், குடற்புண்களை ஆற்றும் தன்மை வாழையிலைகளுக்கு உண்டு. இந்த இலையின் மேல்புறத்தில், குளோரோபில் என்ற பொருள் நிறைந்துள்ளது. இந்த வாழையிலையில் தண்ணீரை தெளித்து, அதன்மீது நெய்யை ஊற்றி, இலையில் சூடான உணவுகளை பரிமாறும்போது, இலையில் உள்ள சத்துக்கள் எல்லாம், குளோரோபில்லுடன் கரைந்து, உணவுடன் கலந்து விடுகின்றன. இவைகளை நாம் சாப்பிடும்போது, அனைத்து சத்துக்களும் நமது உடலுக்குள் சென்று ஆரோக்கியத்தையும், ஆயுளையும் கூட்டுகின்றன.

இந்த வாழை இழைகள் ரத்தம் உறைவதையும் தடுக்கிறது. இதில் இருக்கும் சாலிசிலிக் அமிலம் புற்றுநோய் காரணிகளை அடியோடு அழிக்கின்றன. இலையில் சாப்பிடுபவர்களுக்கு இளநரை அவ்வளவாக வருவதில்லையாம். வாய், இரைப்பை, சிறுகுடல் போன்ற பகுதிகளில் உள்ள என்சைம்கள், செரிமான செல்களின் வளர்ச்சி, உற்பத்திக்கு உதவு செய்கின்றன. வாழை இலையில் ஆன்டி ஆக்சிடன்ட் அதிகளவில் இருப்பதால், உடலின் செல் சிதைவு ஏற்படாமல் காக்கின்றன. இதனால், வயது சுருக்கம் லேசில் ஏற்படுவதில்லை. மன அழுத்தம், புற்றுநோய் மற்றும் இதய நோய்களும் இதனால், தடுக்கப்படுகின்றன.

சிறுநீரகம், விதைப்பை தொடர்புடைய பிரச்சனைகளுக்கு வாழையிலைகள் மருந்தாகின்றன. அல்சர் புண்களுக்கும் வாழையிலையே மருந்தாகின்றன. தீயில் சுட்ட புண்களை ஆற்றுவதற்கும், இந்த வாழை இலையே மருந்தாகின்றன. அதனால்தான் வாழையில் பரிமாறுவதுடன், வாழையிலையை வைத்தே சமைக்கவும் செய்வார்கள்.

Read More : கெடுதல் என தெரிந்தும் ஜங்க் ஃபுட் மீது ஆர்வம் அதிகமாவது ஏன்..? மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டுவதற்கு என்ன காரணம்..?

Tags :
மருத்துவ குணங்கள்வாழைவாழை இலை
Advertisement
Next Article