மன அழுத்தம், படபடப்பை குறைக்கும் கற்பூரவள்ளி இலை..!! இத்தனை மருத்துவ குணங்கள் இருக்கா..?
நம் நாட்டில் பல்வேறு மூலிகை செடிகள் உள்ளன. ஆனால், இந்த மூலிகை செடிகளில் உள்ள மருத்துவ குணங்களை நாம் யாரும் அறிவதில் கவனம் செலுத்துவதில்லை. இந்தநிலையில், தற்போது, கற்பூரவள்ளி இலையில் விஷக்கிருமிகளை அழிக்கக்கூடிய சிறந்த மருந்தாக விளங்கி வருகிறது. அதிக காரத்தன்மை கொண்ட கற்பூரவள்ளி இலையில், நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இந்த இலையை அப்படியாகவும் சாப்பிடலாம் தேனுடம் கலந்து சாப்பிடலாம். கற்பூரவள்ளி இலையை நன்றாக கசக்கி பிழிந்து அதன் சாற்றை மூக்கில் நுகர்ந்தால் தீராத மூக்கடைப்பு மற்றும் சைனஸ் பிரச்சனைகளில் இருந்து முற்றிலும் விடுபடலாம்.
மேலும் இந்த இலையின் சாற்றை நெஞ்சு, கழுத்து மற்றும் நெற்றி பகுதிகளில் தடவினால் உடனடியாக காய்ச்சல் நீங்கும். வறட்டு இருமல், இருமலால் ஏற்படும் தொண்டை கட்டு பிரச்சனை நீங்க, கற்பூரவள்ளி இலை சாறுகளில் சில சொட்டுகளை தொண்டையில் படும்படி அருந்தவேண்டும். தோல்களில் சிலருக்கு படை, அரிப்பு சொறி போன்ற நோய்கள் தீர கற்பூரவள்ளி இலையின் சாற்றை தோலில் பாதிப்படைந்த பகுதியில் தடவினால், விரைவில் சரியாகும்.
எலும்பு மற்றும் மூட்டு தேய்மானம் ஏற்பட்டவர்களுக்கு, ஒமேகா 6 என்ற வேதிப்பொருள் அதிகமாக நிறைந்துள்ள கற்பூரவள்ளி இலையினால் செய்த தைலத்தை எலும்பு மற்றும் மூட்டு தேய்மானம் பகுதிகளில் தேய்த்து வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும் .மேலும் இந்த ஒமேகா 6 வேதிப்பொருள் புற்றுநோய்க்கு எதிராகவும் செயல்படுகிறது. அனைத்தையும் விட முக்கியமானது, தற்போது, மனிதர்களுக்கு உள்ள பிரச்சனைகளில் மன அழுத்தமே மிகப்பெரிய கொடிய நோயாக இருக்கிறது.
உலகில் பாதிக்கு மேல் உள்ள மனிதர்களுக்கு மனதில் அமைதியின்மையும், படபடப்பு தன்மையும் ஏற்படும். கற்பூரவள்ளி இலையின் வாசனையை சுவாசிப்பவர்களுக்கு இலையில், இருக்கக்கூடிய ரசாயன பொருட்கள் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி மன அழுத்தம் படபடப்பு தன்மையை போக்கும்.
Read More : ”இனி படம் பார்த்துவிட்டு வருவோரிடம் விமர்சனம் கேட்கக் கூடாது”..? சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!