முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

+92 எண்களில் போன் வருதா?… மொபைல் பயனர்களுக்கு எச்சரிக்கை!

08:10 AM Apr 08, 2024 IST | Kokila
Advertisement

Warning: 92-xxxxxxxxxx போன்ற வெளிநாட்டு மொபைல் எண்களில் இருந்து வரும் வாட்ஸ்அப் அழைப்புகளில் இந்த மோசடி அதிகமாக நடக்கிறது. இந்த மோசடி குறித்து தொலைத்தொடர்பு துறை ஆலோசனை வழங்கியுள்ளது.

Advertisement

மோசடி செய்பவர்கள் இந்த அழைப்புகள் மூலம் மக்களை அச்சுறுத்தி அவர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பெற்று நிதி மோசடிகளை மேற்கொள்ள முயற்சி செய்கின்றனர். தொலைத்தொடர்புத் துறை தனது சார்பாக இதுபோன்ற அழைப்புகளைச் செய்ய யாரையும் அங்கீகரிக்கவில்லை எனவும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறும் விளக்கியுள்ளது.

இதுபோன்ற போலியான போன் கால்கள் வரும்போது அவர்களிடம் எந்தத் தகவலையும் பகிர வேண்டாம் என்றும் கேட்டுக் தொலைத்தொடர்புத்துறை கொண்டுள்ளது. இதுபோன்ற மோசடி அழைப்புகள் குறித்து சஞ்சார் சாத்தி (www.sancharsaathi.gov.in) இணையதளத்தின் மூலம் அதன் புகார் அளிக்கலாம் என்று பொதுமக்களுக்கு தொலைத்தொடர்புத்துறை அறிவுறுத்தியுள்ளது.

மொபைல் பயனர்கள் சைபர் கிரைம் அல்லது நிதி மோசடிக்கு ஆளானால், சைபர் கிரைம் அவசர உதவி எண்ணான 1920 க்குத் தொடர்புகொண்டு உதவி பெறலாம். அல்லது www.cybercrime.gov.in மூலம் என்ற இணையதளத்திலும் புகார் அளிக்கலாம்.

Readmore: மதுப்பிரியர்கள் அதிர்ச்சி..!! டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு..!! எப்போது தெரியுமா..?

Advertisement
Next Article