சென்னை ஏர்போர்டிற்கு வர மறுக்கும் கால் டாக்ஸிகள்..!! அதிரடியாக என்ட்ரி கொடுத்த அரசுப் பேருந்துகள்..!! பயணிகள் நிம்மதி.!!
சென்னையில் அதிகப்படியான கனமழையால், மக்கள் அத்தியாவசிய சேவைகளுக்கு கூட வெளியில் போக முடியாத அளவிற்கு அவதிப்பட்டுள்ளன. பல சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், பல முக்கிய நெடுஞ்சாலைகளில் நெரிசல் அதிகமாக இருந்தது. இதனால் வாடகை கார் ஓட்டுவோர், ஆட்டோ ஓட்டுபவர்கள் பலர் சேவையை ஏற்கவில்லை. ஓலா, உபேர் போன்ற கால் டாக்ஸி சேவைகளும் நேற்று சென்னையில் பல பகுதிகளில் வேலை செய்யவில்லை. குறிப்பாக சென்னை விமான நிலையம் பகுதிகளில் கால் டாக்ஸி சேவைகளே இல்லை.
இதற்கிடையே, சென்னைக்கு விமானத்தில் வருவதற்கு முன் மழை பெய்து கொண்டிருப்பதை செய்திகளில் பார்த்த பல பயணிகள் விடு திரும்ப முடியாத நிலை இருந்தது. விமான நிலையம் வந்த பிறகு வாடகை வாகனங்களை புக் செய்தால் புக்கிங் கேன்சல் ஆகிவிடும் நிலை இருந்தது. இதையடுத்து கனமழை காரணமாக தனியார் வாடகை கார்கள் சவாரி எடுக்க மறுப்பதாக விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் அரசுக்கு புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, அந்த புகாருக்கு உடனே நடவடிக்கை எடுத்த அரசு, தாம்பரம் வழித்தடத்தில் செல்லும் அரசுப் பேருந்துகளை விமானங்களின் வருகை நேரத்திற்கு ஏற்றவாறு விமான நிலையத்திற்கு உள்ளே சென்று பயணிகளை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தது. அரசுப் பேருந்தை பார்த்ததும் பயணிகள் நிம்மதி அடைந்தனர். இன்றும் இதே போல் மாநகரப் பேருந்துகள் சென்னை விமான நிலையத்திற்கு இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இதனால் விமான பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். விமான பயணிகளுக்கு இந்த பேருந்து சேவை பெரும் உதவியாக இருக்கும். இது தொடர்ந்தால் இன்னும் நல்லாருக்கும் என தமிழக அரசுக்கு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Read More : கனமழையால் விடுமுறையில் இருக்கும் மாணவர்களின் கவனத்திற்கு..!! அமைச்சரின் இந்த உத்தரவை கவனிச்சீங்களா..?