முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கால் டாக்சி, ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சி..!! சி.என்.ஜி. எரிவாயு விலை மேலும் உயருகிறது..!!

CNG for vehicles It has been reported that the price of gas is likely to go up by Rs.4 to Rs.6 per kg.
11:49 AM Oct 21, 2024 IST | Chella
Advertisement

வாகனங்களுக்கான சி.என்.ஜி. எரிவாயு விலை கிலோவுக்கு ரூ.4 முதல் ரூ.6 வரை உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் பிற மாநிலங்களைப் போல சிஎன்ஜி வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாடு விவகாரத்தில், ஒப்பீட்டளவில் குறைவான பாதிப்பையே சிஎன்ஜி வாகனங்கள் ஏற்படுத்துகின்றன. தமிழ்நாட்டில் தற்போது காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், கோவை, கடலூர், நாகை, திருவாரூர், ராமநாதபுரம், சேலம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வாகனங்களுக்கான சிஎன்ஜி வாயுவை பெறும் வசதி உள்ளது.

இந்நிலையில், வாகனங்களுக்கான சி.என்.ஜி. எரிவாயு விலை கிலோவுக்கு ரூ.4 முதல் ரூ.6 வரை உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உற்பத்தி சரிவு, பற்றாக்குறை காரணமாக விலையை தற்போது உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் ஒரு கிலோ சி.என்.ஜி. ரூ.90-க்கு விற்பனையாகிறது.

இது மேலும், விலை உயரும் பட்சத்தில் ஒரு கிலோ சி.என்.ஜி. ரூ.96-க்கு விற்பனையாகும் என்று கூறப்படுகிறது. இதனால், அதிகளவில் சி.என்.ஜி. வாகனங்களை பயன்படுத்தி வரும் கால் டாக்சி, ஆட்டோ ஓட்டுநர்கள் கவலையடைந்துள்ளனர்.

Read More : ஆன்லைனில் ஈசியாக பட்டா மாற்றலாம்..!! என்னென்ன ஆவணங்கள் தேவை..? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Tags :
சி.என்.ஜி.சி.என்.ஜி. எரிவாயுபெட்ரோல் விலை
Advertisement
Next Article