முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஐயோ...! கன்றுவீச்சு நோய்... மனிதனுக்கு நேரடியாக பரவும்...! உடனே இந்த இலவச தடுப்பூசி போட வேண்டும்...!

06:10 AM Feb 17, 2024 IST | 1newsnationuser2
Advertisement

கன்று வீச்சு நோய் தடுப்பூசி மருந்துகள் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருந்தகங்களுக்கும், கால்நடை மருத்துவமனைகளுக்கும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

இது குறித்து மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; கன்றுவீச்சு நோய் ப்ரூசெல்லா அபார்ட்ஸ் என்ற நுண்ணுயிரியால் ஏற்படுகிறது. இந்நோய் பாதித்த கால்நடைகளில் கன்றுவீச்சு மற்றும் மலட்டுத்தன்மை ஏற்பட்டு வாழ்நாள் முழுவதும் கன்று ஈனாத நிலை ஏற்படும். இந்நோய் கால்நடைகளுக்கு வராமல் தடுக்க கன்று வீச்சு நோய் தடுப்பூசி மருந்துகள் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருந்தகங்களுக்கும், கால்நடை மருத்துவமனைகளுக்கும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

இது மாடுகளிலிருந்து பால் வழியாகவும் மற்றும் நேரிடையாகவும் மனிதனுக்கு பரவும் நோயாகும். கன்றுவீச்சு நோய் தடுப்பூசி கன்றுகளுக்கு போடுவதன் மூலம் கால்நடைகளுக்கு இந்நோய் வராமல் தடுக்கலாம். இத்தடுப்பூசி ஏற்கனவே இரண்டு கட்டங்களாக போடப்பட்டுள்ளது. தற்போது ப்ரூசெல்லோசிஸ் தடுப்பூசி 3 வது கட்டமாக மார்ச் 15ம் தேதி வரை நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கால்நடை நிலையங்கள் மூலம் அனைத்து கிராமங்களிலும் போடப்படவுள்ளது.

கன்றுவீச்சு நோய் தடுப்பூசி கன்றுகளுக்கு போடுவதன் மூலம் கால்நடைகளுக்கு இந்நோய் வராமல் தடுக்கலாம். எனவே, அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் கன்றுகளுக்கு இலவசமாக தடுப்பூசியை போட்டுக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் ‌.

Tags :
CowNamakkal dtvaccine
Advertisement
Next Article