For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பெண்களுக்கு அவசியமான கால்சியம் சத்து ! எந்த உணவில் அதிகம் தெரியுமா?

04:33 PM Apr 04, 2024 IST | Baskar
பெண்களுக்கு அவசியமான கால்சியம் சத்து   எந்த உணவில் அதிகம் தெரியுமா
Advertisement

உலகளவில் ஆண்களை காட்டிலும், பெண்கள்தான் கால்சியம் சத்தால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

Advertisement

நமது உடலில் கால்சியம் சத்து குறைந்து விட்டால் முதுகு வலி, மூட்டு வலி, எலும்பு அரிப்பு, நகம், பற்கள் என பாதிப்புகள் உருவாகும். அஜீரணக்கோளாறு, வாயுத்தொல்லை ஆகிய பிரச்சனைகள் இருப்பவர்களுக்கும் கால்சியம் குறைபாடு இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. கால்சியம் சத்து தசையை இயக்குவதற்கும், நரம்பு மண்டலம் செய்தியை மூளைக்கு எடுத்துச் செல்வதற்கும் அவசியம்.

குறிப்பாக, பருப்புகள், சோயாபீன்ஸ், கொண்டைக்கடலை மற்றும் பல்வேறு வகையான பருப்பு வகைகளில் அதிகளவில் கால்சியம் செறிந்து காணப்படுகின்றது. ஒரு கப் சமைத்த பாசிப்பயறில் 270 மில்லிகிராம் வரையில் கால்சியம் நிறைந்துள்ளது. உடலுக்கு தேவையான கால்சியத்தை பெற்றுக்கொடுப்பதில் பருப்பு வகைகள் முக்கிய மூலமாக இருக்கின்றன.

பால்:

ஊட்டச்சத்துகளில் மிகவும் முக்கியமான கால்சியம் பாலின் மூலம் பெறப்படுகிறது. கால்சியம் சத்து, பால், தயிர், மோர், வெண்ணெய் பாலாடைக்கட்டி என்று அனைத்து வகையான பால் பொருட்களிலும் நிரம்பியுள்ளது.

சோயா பால்:

பால் பொருட்கள் சாப்பிட முடியவில்லை என்று வருத்தப்படுபவர்களுக்கு, சோயா பால் நல்ல மாற்றாக உள்ளது. பசும்பாலில் இருக்கும் அதே அளவுள்ள கால்சியம், சோயா பாலிலும் இருக்கறது.

பருப்பு வகைகள்:

பீன்ஸ், கடலைப் பருப்பு, பாசி பருப்பு, மசூர் தால் உள்ளிட்ட பல்வேறு பருப்பு வகைகளில் அதிக அளவு கால்சியம் உள்ளது. தினமும் ஏதும் ஒரு வகை பருப்பை சேர்ப்பது மூலம், லாக்டோஸ் இன்டாலரன்ஸ் உள்ளவர்கள் தேவையான கால்சியம் பெறலாம். குறிப்பாக, உளுந்தில் எலும்புகளை வலுவாக்கும் சத்து இருக்கிறது.மேலும் இதில், இரும்பு, மக்னீசியம், மாங்கனிசு மற்றும் பொட்டாசியம், நார்ச்சத்துக்களும் நிறைந்துள்ளது.

கீரை வகைகள்:

கீரை வகைகளில் கால்சியம் சத்து உண்டு. பசலைக்கீரையில் சற்றுக் கூடுதலாக இருக்கும். தினமும் கீரைச் சாப்பிடுவது ரொம்பவே நல்லது. வாரத்திற்கு இரு முறையாவது புதினா, கொத்துமல்லி, கறிவேப்பிலை துவையல் சாப்பிட வேண்டும். மணத்தக்காளி கீரையைக் கூட்டாகவோ, துவையலாகவோ செய்து சாப்பிட்டால் கால்சியம் சத்து அதிகமாக கிடைக்கும்.

பாதாம் மற்றும் பூசணி விதைகள்:

வைட்டமின் E சத்து மற்றும் கனிமச்சத்துக்களில் நிறைந்துள்ள பாதாமில், நீங்கள் ஓரளவுக்கு கால்சியம் பெறலாம். 30 கிராம் பாதாமில் 75 எம்ஜி கால்சியம் உள்ளது. தினமும் ஒரு கைப்பிடி அளவு பாதாம் சாப்பிட்டு வரலாம். பூசணி விதைகள், எள்ளு, கசகசா உள்ளிட்ட பல்வேறு விதைகளில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. ஒரு ஸ்பூன் கசகசாவில் 127 எம்ஜி கால்சியம் உள்ளது என்கின்றனர் நிபுணர்கள்.

Advertisement