முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

விவசாயிகளுக்கு மத்திய அரசு குட் நியூஸ்...! குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வுக்கு ஒப்புதல்...! எவ்வளவு தெரியுமா...?

Cabinet approves Minimum Support Prices (MSP) for Rabi Crops for Marketing Season 2025-26
06:24 AM Oct 17, 2024 IST | Vignesh
Advertisement

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், 2025-26 சந்தைப் பருவத்தில் ரபி பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதி செய்வதற்காக, 2025-26 சந்தைப் பருவத்திற்கான ரபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு உயர்த்தியுள்ளது. கடுகு குவிண்டாலுக்கு ரூ.300-ம், மசூர் பருப்பு குவிண்டாலுக்கு ரூ.275-ம் குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டுள்ளது. பருப்பு, கோதுமை, குங்குமப்பூ, பார்லி ஆகியவற்றின் விலை குவிண்டாலுக்கு முறையே ரூ.210, ரூ.150, ரூ.140, பார்லி ரூ.130 உயர்ந்தப்பட்டுள்ளது.

கோதுமைக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை ரூ. 2425 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கெனவே ரூ. 2275 ஆக இருந்தது. மனித உழைப்பு, மாட்டு உழைப்புஇயந்திர உழைப்பு, குத்தகை வாடகை, விதைகள், உரங்கள், நீர்ப்பாசன செலவுகள், கருவிகள், பண்ணை கட்டிடங்கள் மீதான தேய்மானம், நடைமுறை மூலதனத்தின் மீதான வட்டி, பம்ப் செட்டுகளை இயக்குவதற்கான டீசல்மின்சாரம் போன்ற அனைத்து செலவுகளையும் உள்ளடக்கிய செலவை இந்த குறைந்த பட்ச ஆதரவு விலை குறிக்கிறது.

2025-26 சந்தைப் பருவத்திற்கான கட்டாய ரபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையின் அதிகரிப்பு, உற்பத்தி செலவை விட குறைந்தபட்சம் 1.5 மடங்கு அளவில் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்கும் மத்திய பட்ஜெட் 2018-19 அறிவிப்பின் அடிப்படையில் அமைந்துள்ளது. ரபி பயிர்களுக்கான இந்த அதிகரித்த குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாயிகளுக்கு லாபகரமான விலையை உறுதி செய்வதுடன், பயிர் பன்முகத்தன்மையை ஊக்குவிக்கும்.

Tags :
cabinetcentral govtfarmersMinimum Support PricesMsp
Advertisement
Next Article