முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

விவசாயிகளுக்கு குட் நியூஸ்...! இதற்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.12,000 ஆக உயர்வு...!

08:34 AM Dec 28, 2023 IST | 1newsnationuser2
Advertisement

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, 2024 –ம் ஆண்டு பருவத்தில் கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. விவசாயிகளுக்கு லாபகரமான விலையை வழங்குவதற்காக, அனைத்து கட்டாய பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை அகில இந்திய அளவில் உற்பத்தி செலவை விட குறைந்தது 1.5 மடங்கு அளவில் நிர்ணயிக்கப்படும் என்று 2018-19-ம் ஆண்டின் மத்திய பட்ஜெட்டில் அரசு அறிவித்தது.

Advertisement

அரவை கொப்பரையின் நியாயமான சராசரி தரத்திற்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.11,160/- ஆகவும், அரவைக்கு முந்தைய கொப்பரை குவிண்டாலுக்கு ரூ.12,000/- ஆகவும் 2024 பருவத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அரவை கொப்பரைக்கு, 51.84 சதவீதமும், அரவைக்கு முந்தைய கொப்பரைக்கு, 63.26 சதவீதமும் லாபம் கிடைக்கும். இது, அகில இந்திய சராசரி உற்பத்தி செலவை விட, 1.5 மடங்கு அதிகமாகும். அரவைக் கொப்பரை எண்ணெயைப் பிரித்தெடுக்கவும், அரவைக்கு முந்தைய / சமையல் கொப்பரை உணவுக்கும் மத நோக்கங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

கேரளா, தமிழ்நாடு மாநிலங்களில் மில்லியன் கணக்கான கொப்பரை உற்பத்தியாளர்கள் உள்ளனர்.2024 பருவத்திற்கான குறைந்தபட்ச ஆதரவு விலை அரவை கொப்பரைக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.300/- மற்றும் அரவைக்கு முந்தைய கொப்பரைக்கு முந்தைய பருவத்தை விட குவிண்டால் ஒன்றுக்கு ரூ.250/- அதிகரித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், அரவை கொப்பரை மற்றும் அரவைக்கு முந்தைய கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதார விலையை 2014-15 -ம் ஆண்டில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5,250 ஆகவும், ரூ.5,500 லிருந்து 2024-25-ம் ஆண்டில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.11,160 ஆகவும், 2024-25-ம் ஆண்டில் குவிண்டாலுக்கு ரூ.12,000 ஆகவும் அரசு உயர்த்தியுள்ளது.

Tags :
Coconut pricemoney
Advertisement
Next Article