பொங்கல் பண்டிகை அன்று CA தேர்வா? வலுத்த கண்டனங்கள்.. தேதியை மாற்றிய மத்திய அரசு..!!
பொங்கல் அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட சி.ஏ. தேர்வு தேதிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தை சேர்ந்த கட்சிகளின் கடுமையான ஏதிர்ப்பை அடுத்த இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பட்டயக் கணக்காளர் என அழைக்கப்படும் சி.ஏ தேர்வுகள், வரும் 2025ஆம் ஆண்டு ஜனவரி 12,14,16,18 ஆகிய தேதிகளில் நடைபெறும் என ஏற்கெனவே இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (The Institute of Chartered Accountants of India) அறிவித்திருந்தது. பட்டயக் கணக்காளர் என அழைக்கப்படும் சி.ஏ தேர்வுகள், வரும் 2025ஆம் ஆண்டு ஜனவரி 12,14,16,18 ஆகிய தேதிகளில் நடைபெறும் என ஏற்கெனவே இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (The Institute of Chartered Accountants of India) அறிவித்திருந்தது.
தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகை அன்று அரசு விடுமுறை தினம் இருக்கும் நிலையில், திட்டமிட்டு பொங்கல் பண்டிகை அன்று சி.ஏ. தேர்வுகளை மத்திய அரசு அறிவித்திருப்பதாக மார்க்சிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன், திமுக எம்பி கனிமொழி, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். தொடர்ந்து எதிர்ப்புகள் வலுத்து வந்த நிலையில், ஜனவரி மாதம் 14ஆம் தேதி நடைபெறவிருந்த சி.ஏ. தேர்வை 16ஆம் தேதி அன்று நடைபெறும் என மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
Read more ; தீவிரமாக வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. டெல்டா மாவட்டங்களுக்கு கட்டணமில்லா உதவி எண்கள் அறிவிப்பு..!!