முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"9000 கோடி கடன்.."! அமெரிக்காவில் திவால் நோட்டீஸ் தாக்கல் செய்த பைஜூ ஆல்ஃபா நிறுவனம்..!

11:26 AM Feb 02, 2024 IST | 1newsnationuser4
Advertisement

ஒரு காலத்தில் இந்தியாவில் இணைய வழி கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனமாக விளங்கிய பைஜூ நிறுவனத்தின் ஒரு பிரிவு அமெரிக்காவில் திவால் நோட்டீஸ் பதிவு செய்துள்ளது. 9 ஆயிரம் கோடி ரூபாய்(1.2 பில்லியன் அமெரிக்க டாலர்) கடனை திருப்பி செலுத்த முடியாததால் அந்த நிறுவனம் திவாலானதாக அறிவிக்க நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட முகவர் தெரிவித்திருக்கிறார்.

Advertisement

கடன் தொடர்பாக பைஜூவின் தாய் நிறுவனத்துடன் போராடுவதற்கு பைஜூவின் ஆல்ஃபா இன்க் நிறுவனத்திடம் போதுமான நிதி இல்லாததால் நிறுவனம் திவால் ஆனதாக அறிவிப்பதற்கு மனு தாக்கல் செய்திருப்பதாக அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரி திமோதி போல் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த ஆவணங்களில் தெரிவித்துள்ளார். மேலும் பைஜுவின் ஆல்ஃபாவிற்கு நிதியளிக்கும் நிறுவனங்கள் நிதி வழங்குவதற்கு முன் திவால் நிலை தாக்கல் செய்ய வேண்டும் என அவர் சமர்ப்பித்துள்ள மனுவின் 11-வது அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இணைய வழி கல்வியில் முன்னோடியாக விளங்கும் பைஜூ நிறுவனம் கடன் தொல்லைகளால் பல சிரமங்களை சந்தித்து வந்தாலும் இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் தனது வணிகத்தையும் கல்வி சேவையையும் தொடர்ந்து வழங்கி வருகிறது. மேலும் பைஜூவின் தாய் நிறுவனம் நிதி சிக்கல்களை சமாளிக்க அதன் முந்தைய சுற்றில் இருந்து 90 சதவீதத்திற்கும் அதிகமான தள்ளுபடியில் நிதி திரட்ட முயற்சிக்கிறது.

அமெரிக்காவின் திவால் விதிகளின்படி பைஜூ ஆல்ஃபா நிறுவனத்திற்கு கடன் வழங்க அனுமதி அளிக்கும். இந்த பணத்தைக் கொண்டு ஆல்பா நிறுவனம் தனது தாய் நிறுவனத்துடன் சட்ட ரீதியான போராட்டங்களில் ஈடுபடலாம். அந்தப் போராட்டங்களில் வெற்றி பெற்றால் கடன் கொடுத்த நிறுவனங்கள் தங்களது பணத்தை திரும்ப கேட்கலாம். அமெரிக்காவில் சிக்கலான நீதிமன்ற வழக்குகள் பல ஆண்டுகள் இழுப்பறியில் நடக்கும். இதனால் பல மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகலாம்.

பைஜூவின் தாய் நிறுவனம் பைஜு ஆல்ஃபா நிறுவனத்திடம் இருந்து 4,000 கோடி ரூபாயை(500 மில்லியன் அமெரிக்க டாலர்) தனது கணக்கிற்கு மாற்றியதாக மோசடி வழக்கு பதிவு செய்வதற்கு திவால் நிலையை பயன்படுத்தலாம். அமெரிக்காவில் பெரிய நிறுவனங்களின் திவால் வழக்குகளில் இது போன்ற முறைகள் பயன்படுத்துவது வழக்கமான ஒன்று.

பைஜூ ஆல்ஃபா நிறுவனத்திடம் 4000 கோடி ரூபாய்(500 மில்லியன் டாலர்) மதிப்பிலான சொத்துக்கள் மற்றும் 9000 கோடி ரூபாய்(1 பில்லியன் டாலர்) கடன் இருப்பதாக தனது திவால் கோரிக்கை மனுவில் குறிப்பிட்டிருக்கிறது. இந்த விவரங்கள் தொடர்பான மின்னஞ்சலுக்கு பைஜூவின் தாய் நிறுவன வழக்கறிஞர் பதில் அளிக்கவில்லை.

பைஜூ நிறுவனத்திற்கு கடன் கொடுத்தவர்கள் கடந்த வருடம் டெலாவேரில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெற்ற சட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்றனர். இதனைத் தொடர்ந்து நிதிநிலை தொடர்பான விவகாரங்களுக்கு புதிய இயக்குனரை நியமிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன் அடிப்படையில் திமோதி போல் புதிய இயக்குனராக நியமிக்கப்பட்டார். இதிலிருந்து பைஜூ மற்றும் அந்த நிறுவனத்திற்கு கடன் வழங்கியவர்கள் ஒருவரின் மீது ஒருவர் குற்றம் சாட்டி தொடர்ந்து சட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கடந்த மாதம் கடன் வழங்கியவர்கள் இந்தியாவிலும் திவால் மனு தாக்கல் செய்துள்ளனர்.

Tags :
1.2 Billion US dollarBankruptcyByjuByju RaveendranByju’s shareholdersPetition 11Pioneer In Online Education
Advertisement
Next Article