முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இந்த பிசினஸ் செய்தால் மாதம் ரூ.2 லட்சம் வரை சம்பாதிக்கலாம்..!! நீங்களும் டிரை பண்ணி பாருங்க..!!

If you want to start your own business, you can think about the medical courier services business that delivers medical supplies.
05:30 AM Oct 07, 2024 IST | Chella
Advertisement

சொந்தமாக தொழில் துவங்க வேண்டும் என்று பலரும் விரும்புவார்கள். ஆனால், எந்த துறையில் நுழைவது எவ்வளவு முதலீடு செய்வது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு சரியான விடை தெரியாமல் தடுமாறுகிறார்கள். நீங்களும் இவர்களில் ஒருவராக இருந்தால், ரூ.7 லட்சம் முதலீட்டில் மாதந்தோறும் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை வருமானம் கிடைக்க கூடிய தொழில் ஒன்றை பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

Advertisement

நீங்கள் சொந்தமாக தொழில் செய்ய விரும்பினால் மருத்துவப் பொருட்களை (Medical Supplies) டெலிவரி செய்யும் மெடிக்கல் கூரியர் சர்வீஸஸ் (medical courier services) தொழில் பற்றி யோசிக்கலாம். மெடிக்கல் டெலிவரி மற்றும் பிக்-அப் சர்வீஸ்களை வழங்குவது சுயதொழில் செய்ய விரும்புபவர்கள் அல்லது வணிக உலகில் நுழைய காத்திருப்பவர்களுக்கு சிறந்த வாய்ப்பாக அமையும்.

தொழில்முனைவோருக்கு மெடிக்கல் கூரியர் பிசினஸ் என்பது குறைந்த விலை செயல்திறன் மற்றும் பல ரெவின்யூ சோர்ஸ்களை (வருவாய் ஆதாரங்கள்) தருவதால் சிறந்த ஆப்ஷனாக இருக்கக் கூடும். மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்ஸ்களில் மட்டுமே மருந்துகள் (medications) பயன்படுத்தப்படுவது இல்லை. மாறாக ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான ஆர்டர்கள் supplies-ற்காக அல்லது மற்றும் தனிநபர்கள் குறிப்பிட்ட மருந்துகளுக்காக ஆன்லைனில் ஆர்டர் செய்கின்றனர். எனவே, மெடிக்கல் கூரியர் சர்விஸ் என்று வரும் போது இதில் ஈடுபட ஆர்வமுள்ளவர்களுக்கு ஒரு வைட்-ஓபன் மார்க்கெட் இருக்கிறது.

பிற பொருட்களை விட மருத்துவ தயாரிப்பு பொருட்களை கூடுதல் பாதுகாப்பாக மற்றும் முறையாக கையாண்டு அதனை டெலிவரி செய்ய தங்களால் முடியும் என்பதை உறுதிப்படுத்த, மெடிக்கல் கூரியர் வணிகத்தில் ஈடுபட நினைக்கும் நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட பயிற்சி மற்றும் சான்றிதழ்கள் தேவைப்படலாம். கடந்த 2021இல் medical supplies-களை விநியோகிப்பதற்கான உலகளாவிய சந்தையின் மதிப்பு 50.33 அமெரிக்கா டாலர் பில்லியனாக இருந்ததாக மதிப்பிட்டுள்ளது. மேலும் இந்த சந்தை மதிப்பு வரும் 2030இல் 97.5 அமெரிக்க டாலர் பில்லியனை எட்ட கூடும் அல்லது இதனை தாண்ட கூடும் என்றும் கூறப்படுகிறது.

மெடிக்கல் கூரியர் பிஸினஸிற்கு தேவையான முதலீடு:

ரூ.3,32,420 முதல் ரூ.8,31,050 வரையிலான முதலீட்டில் ஒரு மெடிக்கல் கூரியர் நிறுவனத்தை தொடங்கலாம். மேற்கண்ட முதலீடானது சாஃப்ட்வேர் ,வெப்சைட், ப்ரமோஷன் மற்றும் சரியான சான்றிதழ் (appropriate certification) ஆகியவற்றுக்கான கட்டணம் அடங்கும். உங்களிடம் சொந்தமாக கார் அல்லது வேறு 4 சக்கர வாகனம் இருந்தால் அதனைப் பயன்படுத்தி செலவுகளை குறைத்து கொள்வது மெடிக்கல் கூரியர் பிசினஸில் பெரிதும் உதவும்.

லாபம் :

மெடிக்கல் கூரியர் சர்விஸில் பொதுவாக ஒரு மணி நேரத்திற்கு சுமார் ரூ.2900 செலவாகும். டெலிவரிக்கு உங்கள் சொந்த வாகனத்தை பயன்படுத்தினால், அடிப்படை செலவுகளில் சான்றிதழ் வாங்குவது, இணையதளம் உருவாக்குதல் மற்றும் மார்கெட்டிங் கட்டணங்கள் ஆகியவை அடங்கும். இதில் உங்களுக்கு சுமார் 85% வரை லாபம் கிடைக்கக்கூடும். நாளொன்றுக்கு சுமார் 8 மணிநேரம் வாரத்தில் 5 நாட்கள் டெலிவரி செய்வதன் மூலம் இரண்டு வருடங்களில் ரூ.60,66,665 வரை சம்பாதிக்கலாம். லாப வரம்பு 85 சதவீதமாக இருந்தால், உங்கள் லாபம் ரூ.51,52,510 ஆக இருக்கும்.

அதே நேரம் உங்களது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது உங்கள் தொழில் பெருக்க இரண்டாவதாக ஒரு டிரைவரை நீங்கள் வேலைக்கு வைத்தால் உங்கள் லாப வரம்பு சுமார் 65 சதவீதமாக குறையும். ஆண்டு வருமானத்துடன், நீங்கள் ரூ.78,94,975 வரையில் லாபத்தை பெறலாம்.

Tags :
கூரியர்தொழில்மெடிக்கல்
Advertisement
Next Article