விறுவிறுப்பாக நடைபெறும் டிக்கெட் புக்கிங்..! அமரன் படத்தின் முதல் நாள் வசூலே அள்ளப்போகுது!
மறைந்த இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்தன் வாழ்க்கையை மையமாக வைத்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் அமரன். கடந்த 2014ம் ஆண்டு காஷ்மீரில் உள்ள ஷோபியான் மாவட்டத்தில் உள்ள பொதுமக்களை தீவிரவாதிகளிடம் இருந்து காப்பாற்றும் ஆபரேஷனுக்கு தலைமை தாங்கியவர் இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்தன். இந்த போராட்டத்தில் மேஜர் முகுந்தன் உயிரையும் தியாகம் செய்தார். இவரது வாழ்க்கையை மையமாக வைத்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் அமரன்.
சிவகார்த்திகேயனின் 21 படமான இந்த படத்தை ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். இந்த படத்தை சிவகார்த்திகேயன் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்த படத்தில் நடிகை சாய் பல்லவி மேஜர் முகுந்தனனின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் வெளியாகி படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை கிளறியுள்ளது என்றே கூறலாம்.
அக்டோபர் 31 தீபாவளியன்று வெளியாகவுள்ள இந்த படத்திற்கு நேற்று முதல் புக்கிங் தொடங்கி நடைபெற்று வருகிறது. படம் ரிலீஸ் ஆக இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் படத்தின் புக்கிங் நேற்று முதல் தொடங்கி மாஸாக நடந்து வருகிறது. மேலும் சென்னையில் உள்ள பல தியேட்டர்களில் முதல் நாள் ஷோக்கள் நிரம்பி உள்ளது.
அக்டோபர் 31ஆம் நாள், தீபாவளி வியாழக்கிழமை வருகிறது. அதனை அடுத்து வருகிற நவம்பர் 1 அன்று தமிழ்நாடு அரசின் சார்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும், பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் சிறப்பு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொடர்ந்து நான்கு நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதனால் மற்ற படங்களை விட சிவகாத்திகேயனின் அமரன் படம் பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் செய்யும் என்பது உறுதியாகி உள்ளது.
Read More: விஜயின் அரசியல் பயணம் தொடரட்டும்.. ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் வாழ்த்து..!!