For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புஸ்ஸி ஆனந்த்..! உடனே விரைந்த நடிகர் விஜய்..!

07:25 AM Nov 03, 2023 IST | 1Newsnation_Admin
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புஸ்ஸி ஆனந்த்    உடனே விரைந்த நடிகர் விஜய்
Advertisement

விஜய் மக்கள் இயக்கம், மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் நடந்த லியோ லியோ வெற்றி விழா நிகழ்ச்சி மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் காரணமாக ஏற்பட்ட அதிக சோர்வால் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்டுகிறது. மேலும் தற்போது புஸ்ஸி ஆனந்த் நலமுடன் இருப்பதாகவும் தகவல் வெளியாகின.

Advertisement

இந்நிலையில் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விஜய் மக்கள் இயக்கம் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை, நடிகர் விஜய் நேரில் சென்று நலம் விசாரித்தார். நடிகர் விஜய் மருத்துவமனையில் செல்லும் காட்சிகள் இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.

கடந்த 1ஆம் தேதி லியோ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் நிகழ்ச்சி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது, இதில் அர்ஜுன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், திரிஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் விஜயின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement