முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

48 மணி நேரம் கெடு…! ஓட்டை உடைசல் பேருந்துகள்…! பறந்த அரசு உத்தரவு..!

06:21 AM Apr 28, 2024 IST | Baskar
Advertisement

தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசுப் பேருந்துகளையும் அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஆய்வு செய்து, அவற்றில் என்னென்ன குறைகள் உள்ளன என்பதை கண்டறிந்து சீரமைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

கடந்த சில நாட்களாகவே அரசுப் பேருந்துகள் சேதமடைவதும், விபத்தில் சிக்குவதும் தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலையில்,கடந்த சில நாட்களுக்கு முன் ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து ஒன்று புறப்பட்டது. இந்த பேருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது.அப்போது எதிர்பாராக விதமாக பேருந்தில் நடத்துநர் இருக்கையின் நட்டு போல்ட்டு கழன்றுள்ளது. அப்போது நடத்துநர் பேருந்தில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்டார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஓடும் பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு பலர் கண்டனம் தெரிவித்து புதிய பேருந்துகளை தமிழ்நாடு அரசு வாங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். இந்த நிலையில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் அரசு பேருந்துகளில் உள்ள குறைகளை கண்டறிந்து சீரமைக்க வேண்டும் என போக்குவரத்துக்கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Read More: சற்றுமுன்: வட மத்திய மும்பை தொகுதியில் பிரபல வழக்கறிஞரை வேட்பாளராக அறிவித்த பாஜக..!

Advertisement
Next Article