Budget 2024 | செம குட் நியூஸ்..!! செல்போன் விலை குறைகிறது..!! பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்பு..!!
நடப்பு 2024-25ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். இதன்மூலம் தொடர்ந்து 7-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த முதல் நபர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன் முதலில் பட்ஜெட் முன்னுரையை வாசித்தார். தொடக்கத்திலேயே 3ஆம் முறையாக பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆட்சி அமைத்து வரலாறு படைத்துள்ளதாகப் பெருமிதம் தெரிவித்ததோடு, அரசின் மீது நம்பிக்கை வைத்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.
* மருத்துவ உபகரணங்கள், சில மருந்துகளுக்கு சுங்க வரி குறைப்பு.
* புற்றுநோய்க்கு பயன்படுத்தும் மேலும் 3 மருந்துகளுக்கு இறக்குமதி வரி ரத்து.
* செல்போன் உதிரிபாகங்களின் விலை குறைக்கப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.
* மொபைல் போன், உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரி 15 சதவீதம் ஆக குறைக்கப்படும்.
* விண்வெளி சார்ந்த திட்டங்களுக்கு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு.
Read More : Budget 2024 | பீகார், ஆந்திராவுக்கு ஜாக்பாட்..!! ரூ.41,000 கோடி..!! ஒரே போடாக போட்ட நிர்மலா சீதாராமன்..!!