பட்ஜெட் 2024!. புற்றுநோயாளிகளுக்கு நிவாரணம்!. 3 மருந்துகளுக்கு சுங்க வரியில் இருந்து விலக்கு!
Budget 2024: புற்றுநோயாளிகளுக்கு நிவாரணம் வழங்க, மேலும் மூன்று மருந்துகளுக்கு சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 நிதியாண்டுக்கான தனது ஏழாவது தொடர்ச்சியான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். புற்றுநோய் சிகிச்சை மற்றும் புற்றுநோயாளிகளுக்கான ஆதரவு குறித்து குறிப்பிடத்தக்க அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதாவது, "புற்றுநோயாளிகளுக்கு நிவாரணம் வழங்க, மேலும் மூன்று மருந்துகளுக்கு சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்க முன்மொழிகிறேன்" என்று குறிப்பிட்டார், நோயுடன் போராடுபவர்களின் நிதிச் சுமையைக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை இது எடுத்துக்காட்டுவதாக கூறினார்.
மருத்துவ எக்ஸ்ரே இயந்திரங்களில் பயன்படுத்தப்படும் எக்ஸ்ரே குழாய்கள் மற்றும் பிளாட் பேனல் டிடெக்டர்கள் மீதான அடிப்படை சுங்க வரியில் (BCD) விரிவான மாற்றங்களையும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார். இந்த மாற்றங்கள் உள்நாட்டு உற்பத்தி திறனை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட உற்பத்தித் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதையடுத்தும் மருத்துவ எக்ஸ்ரே இயந்திரங்களில் பயன்படுத்த எக்ஸ்ரே குழாய்கள் மற்றும் பிளாட் பேனல் டிடெக்டர்களில் BCD இல் மாற்றங்களை நான் முன்மொழிகிறேன் என்று பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் மேலும் கூறினார்.
இந்த நடவடிக்கைகள், மருத்துவத் துறையில் உள்ளூர் உற்பத்தி மற்றும் புதுமைகளை ஊக்குவிக்கும் அதே வேளையில், மலிவு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் பரந்த திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்று குறிப்பிட்ட நிர்மலா, நாடாளுமன்றத்தில், பீகாரில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும் என அறிவித்தார். இந்த ஆண்டிற்கான, மத்திய சுகாதார அமைச்சகம் ரூ.90,658.63 கோடி ஒதுக்கீட்டைப் பெற்றுள்ளது, இது 2023-2024 பட்ஜெட்டில் திருத்தப்பட்ட மதிப்பீட்டான ரூ.80,517.62 கோடியிலிருந்து 12.59% அதிகமாகும்.
பிப்ரவரி 2024 இடைக்கால பட்ஜெட்டின் போது, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஆஷா பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களை உள்ளடக்கிய சுகாதார பாதுகாப்பு விரிவுபடுத்தப்படும் என்று சீதாராமன் தெரிவித்தார். கூடுதலாக, நோய்த்தடுப்பு மருந்துகளை நிர்வகிப்பதற்கான U-WIN தளம் மற்றும் மிஷன் இந்திரதனுஷ் ஆகியவை நாடு முழுவதும் செயல்படுத்தப்படும். இந்தியாவில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு எதிராக 9 முதல் 14 வயதுடைய சிறுமிகளுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்றும் சீதாராமன் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.