முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பட்ஜெட் 2024!… எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்து மிக முக்கிய அறிவிப்புகள்!… என்னென்ன தெரியுமா?

08:01 AM Jan 30, 2024 IST | 1newsnationuser3
Advertisement

இந்தியாவில் சமீப ஆண்டுகளாக எலெக்ட்ரிக் வாகன செக்டார் மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க ஆர்வம் காட்டி வருகின்றன இதனால் இந்த பட்ஜெட்டில் எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்த மிக முக்கியமான அறிவிப்புகள் எல்லாம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மத்திய அரசு இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களில் விற்பனையை அதிகரிக்கவும் பசுமையான எரிபொருள் பயன்படுத்தும் வாகனங்களின் தயாரிப்பை அதிகரிக்கவும் பல்வேறு விதமான அறிவிப்புகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு ஆட்டோமொபைல் செக்மென்டில் எலெக்ட்ரிக் வாகனங்கள் தான் அதிக அளவிலான பட்ஜெட்டை பெறும் என கூறப்படுகிறது.

ஏற்கனவே எலெக்ட்ரிக் வாகனங்களுக்காக மத்திய அரசு ஃபேம் என்ற மானியத்தை வழங்கி வந்தது. 72 சதவீதமான பட்ஜெட் எலெக்ட்ரிக் டூவீலர்களுக்காக செலவிடப்பட்டுள்ளது. மொத்தம் ஒதுக்கப்பட்ட ரூ 2000 கோடி பட்ஜெட்டில் ரூ 1600 கோடி எலெக்ட்ரிக் டூவீலர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் எலெக்ட்ரிக் சார்ஜிங் ஸ்டேஷன் அமைப்பதில் மிகப்பெரிய சவால்கள் இருந்தன. அதற்கான கட்டுமானத்தை கொண்டு வருவது பெரும் சிக்கலாக இருந்து வந்தது.

அதே நேரத்தில் இந்த ஃபேம் மானியம் மூலம் பொது போக்குவரத்தில் ஏற்ற வாகனங்களின் வருகை அதிகரித்தது. பல மாநிலங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை பொது போக்குவரத்து வாகனமாக பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில் இந்த ஃபேம் மானியத்தை மீண்டும் தொடர இந்த பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அறிவிப்புகளை பொறுத்து எலெக்ட்ரிக் வாகனங்களின் விலையும் குறைய வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

அடுத்ததாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி என்பது அதிகமாக இருக்கிறது எனவும் அதை குறைக்க வேண்டும் எனவும் எெலக்ட்ரிக் வாகனங்களில் விற்பனையை அதிகரிக்க இது உதவும் எனவும் நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்து வந்தது. இது குறித்து அறிவிப்புகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவதன் மூலம் காற்று மாசு குறையும். இதன் காரணமாக எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் அதன் உதிரிபாகங்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.

குறிப்பாக சிறிய ரக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி மிகப் பெரிய அளவில் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் குறைந்த விலையில் எலெக்ட்ரிக் வாகனங்களை மக்களால் வாங்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் இந்த பட்ஜெட்டில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான உரிமம் வழங்குதல் பாதுகாப்பு அம்சங்கள் அதற்கான இன்சூரன்ஸ் குறித்த தமிழக அரசின் பாலிசி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோக இந்தியாவிலேயே பேட்டரிகளை தயாரிக்க பேட்டரி தயாரிப்பு ஆலைகளுக்கு ஊக்குவிக்கும் வகையில் சில அறிவிப்புகள் இடம் பெறும் எனவும் எதிர்பார்க்கலாம்.

Tags :
budgetElectric vehiclesஎலெக்ட்ரிக் வாகனங்கள்பட்ஜெட்முக்கிய அறிவிப்புகள்விலை குறையும் வாய்ப்பு அதிகம்
Advertisement
Next Article