Budget 2024 | பீகார், ஆந்திராவுக்கு ஜாக்பாட்..!! ரூ.41,000 கோடி..!! ஒரே போடாக போட்ட நிர்மலா சீதாராமன்..!!
நடப்பு 2024-25ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். இதன்மூலம் தொடர்ந்து 7-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த முதல் நபர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன் முதலில் பட்ஜெட் முன்னுரையை வாசித்தார். தொடக்கத்திலேயே 3ஆம் முறையாக பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆட்சி அமைத்து வரலாறு படைத்துள்ளதாகப் பெருமிதம் தெரிவித்ததோடு, அரசின் மீது நம்பிக்கை வைத்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் தங்கள் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்த நிலையில், இரு மாநிலங்களுக்கும் சிறப்பு நிதி திட்டத்தில் இருந்து 41,000 கோடி ரூபாய் ஒதுக்கி அனைவரையும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
இரு மாநில முதல்வர்கள் பாஜக கூட்டணியில் இருப்பதால் அந்த மாநிலங்களுக்கு மட்டும் சிறப்பு நிதி அறிவிக்கப்பட்டிருப்பதாக எதிர்கட்சிகள் எழுந்து முழக்கமிட்டன. ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாத நிர்மலா சீதாராமன், தன்னுடைய அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வந்தார். ஆனால், அவ்வப்போது பீகார் குறித்து நிர்மலா சீதாராமன் சில வார்த்தைகளை சொல்லும்போதும் அதே நிலை தொடர்ந்தது. சுற்றுலா துறை அறிவிப்பு வரும்போது பீகார் கோயில் தொடர்பான அறிவிப்பு வந்தபோது எதிர்க்கட்சிகள் மீண்டும் குரல் எழுப்பின.
Read More : Budget 2024 | ”1 கோடி வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம்”..!! நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!!