முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பட்ஜெட் 2024 | புதிய தொழில் தொடங்க வட்டியில்லா கடன்..!! விவசாயம், பால் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை..!!

12:05 PM Feb 01, 2024 IST | 1newsnationuser6
Advertisement

நாடாளுமன்றத்தில் 2024ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், 50 ஆண்டு காலத்திற்கு மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதற்காக ரூ.77,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனைக் கொண்டு மாநிலங்கள் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. மாநில வளர்ச்சியில் மத்திய அரசு அதிக அக்கறை கொண்டுள்ளதாக பட்ஜெட் உரையில் அவர் தெரிவித்தார்.

Advertisement

மேலும், புதிய தொழில் தொடங்க வட்டியில்லா கடன் வழங்கப்படும். இதற்காக ரூ.1 லட்சம் கோடி முதலீட்டில் புதிய நிதியம் அமைக்கப்படவுள்ளது. இதனால், நாட்டில் புதிய தொழில்கள் அதிகரிக்கும். விவசாயம் மற்றும் பால் உற்பத்தியை பெருக்க வழிவகை செய்யப்படும் என்று அறிவித்தார்.

மேலும், பெருநகரங்களில் மெட்ரோ ரயில் சேவையை விரிவுபடுத்த முன்னுரிமை வழங்கப்படும். துறைமுகங்கள் மற்றும் தொழிற்சாலைகளை இணைக்கும் வகையில், 3 ரயில் வழித்தடங்கள் அமைக்கப்படும். 40,000 சாதாரண ரயில் பெட்டிகள், வந்தே பாரத் பெட்டிகளாக மாற்றப்படும் என்று தெரிவித்தார்.

Tags :
budget 2024 date and timeBudget 2024 livebudget 2024 timebudget livebudget live 2024Interim Budget 2024live budget 2024nirmala sitharamanUnion Budget 2024நாடாளுமன்றம்நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்பட்ஜெட் தாக்கல்
Advertisement
Next Article