பட்ஜெட் கூட்டத்தொடர் 2024: நாடாளுமன்றத்தில் '146' எதிர்க்கட்சி எம்.பி.க்களின் சஸ்பெண்ட் ரத்து.! மத்திய மந்திரி பிரஹலாத் ஜோஷி அறிவிப்பு.!
2024 ஆம் வருடத்திற்கான இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை நடைபெற இருக்கும் நிலையில் குளிர்கால பாராளுமன்ற கூட்டத் தொடரின் போது இடைநீக்கம் செய்யப்பட்ட 1046 பாராளுமன்ற உறுப்பினர்களின் இடைநீக்கம் திரும்பப் பெறப்படுவதாக மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி இன்று தெரிவித்திருக்கிறார். மேலும் இவர்களது இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக இரு அவை சபாநாயகர்களிடம் அரசு சார்பாக கோரிக்கை வைத்ததாக தெரிவித்த ஜோஷி அந்தக் கோரிக்கையை இரு அவை சபாநாயகர்களும் அங்கீகரித்ததாக தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பாக அனைத்து கட்சிகளின் கூட்டம் பாராளுமன்றத்தின் உலகத்தில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி குளிர்கால கூட்டத் தொடரின் போது அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்திய மூத்தார் பத்தி ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களின் இடை நீக்கம் திரும்பப் பெறப்பட்டதாக தெரிவித்திருந்தார் மேலும் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து அவர் இந்த தகவலை உறுதிப்படுத்தினார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிரஹலாத் ஜோஷி" அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் இடை நீக்கங்களும் ரத்து செய்யப்படும். இது தொடர்பாக லோக்சபா மற்றும் ராஜ்ய சபா, சபாநாயகர்களிடம் அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை சிறப்பு குழுவினருடன் ஆலோசனை செய்த அவர்கள் அரசின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு 146 உறுப்பினர்களின் இடை நீக்கத்தை ரத்து செய்ததாக அங்கீகரித்தனர்" என தெரிவித்துள்ளார்.
மேலும் இடை நீக்கம் செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் நாளை நடைபெறும் பட்ஜெட் தாக்கல் நிகழ்வில் கலந்து கொள்வார்களா.? என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில் " நிச்சயமாக கலந்து கொள்வார்கள் என பதிலளித்திருக்கிறார் அமைச்சர் ஜோஷி. மேலும் இது தொடர்பாக பேசிய அவர் பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் போது அவை நடவடிக்கைகளுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் 146 பாராளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். டிசம்பர் 13ஆம் தேதி நடைபெற்ற பாராளுமன்ற தாக்குதல் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் எனக் கூறி தொடர் அமளியில் ஈடுபட்டதால் அவர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் அவை சம்பந்தமான கமிட்டிக்கு அனுப்பப்பட்டுள்ளது" என தெரிவித்திருக்கிறார்.
2024-25 வருடங்களுக்கான மத்திய பட்ஜெட் நாளை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதற்கு முன்பான அனைத்து கட்சிகளின் கூட்டம் பாராளுமன்ற நூலகத்தில் பிரஹலாத் ஜோஷி தலைமையில் நடைபெற்றது. நாளை தொடங்க இருக்கும் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் இந்திய ஜனாதிபதி துரோபதி முர்மு அவர்களின் உரையுடன் தொடங்க இருக்கிறது. ஜனாதிபதி அவர்கள் அரசாங்க வணிகத்தின் தேவைகள் குறித்து பேச இருக்கிறார். நாளை தொடங்க இருக்கும் கூட்டத்தொடர் வருகின்ற பிப்ரவரி 9-ஆம் தேதி முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகின்ற பிப்ரவரி 1-ஆம் தேதி 2024-25 வருடத்திற்கான மத்திய அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த வருடம் மே மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் தற்போது இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. மேலும் இரண்டாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்ற பின் தாக்கல் செய்யப்படும் கடைசி பட்ஜெட் இதுவாகும் .