Budget 2024 | ”1 கோடி வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம்”..!! நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!!
நடப்பு 2024-25ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். இதன்மூலம் தொடர்ந்து 7-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த முதல் நபர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன் முதலில் பட்ஜெட் முன்னுரையை வாசித்தார். தொடக்கத்திலேயே 3ஆம் முறையாக பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆட்சி அமைத்து வரலாறு படைத்துள்ளதாகப் பெருமிதம் தெரிவித்ததோடு, அரசின் மீது நம்பிக்கை வைத்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.
* பெண்கள் மேம்பாட்டு திட்டங்களுக்காக 3 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு.
* அதிக வேலைவாய்ப்பை உருவாக்கும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
* நகரங்கள், கிராமப்புறங்களில் மேலும் 3 கோடி வீடுகள் கட்ட நிதி ஒதுக்கப்படும்.
* முத்ரா கடன் உதவி வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்வு.
* 5 ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி வழங்கப்படும்.
* நாடு முழுவதும் 12 மெகா தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும்.
* பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் நகர்ப்புறங்களில் ஒரு கோடி வீடுகள் கட்டப்படும்.
* மாநில அரசுகள் பத்திரப்பதிவு கட்டணங்களை குறைக்க வேண்டும் என பட்ஜெட்டில் அறிவுறுத்தல்.
* சொத்து வாங்கும் பெண்களுக்கு கூடுதலாக வரி சலுகை.
* தொழில் நிறுவனங்களுக்கு புதிய தீர்ப்பாயம் உருவாக்கப்படும். இதன் மூலம் நிலுவையில் உள்ள ஏராளமான வழக்குகள் முடிவுக்கு வரும்.
* 1 கோடி வீடுகளில் சோலார் மின் தகடு அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
* வீடுகளின் மேற்கூரைகளில் சோலார் மின் தகடு அமைத்தால் மாதத்திற்கு 300 யூனிட் வரை மின்சாரம் பெறலாம்.
Read More : EPFO-யில் பதிவு செய்யப்பட்ட ஊழியர்களுக்கு 1 லட்சம் வரை ஒரு மாதம் சம்பளம்..!! நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!!