For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இங்கிலாந்து மன்னர் சார்லஸின் இறுதி சடங்கிற்கு தயாராகும் பக்கிங்ஹாம் அரண்மனை! உயிருடன் இருக்கும்போதே இப்படியா..! வெளிவந்த ஆவணம்…!

07:15 AM Apr 27, 2024 IST | Kathir
இங்கிலாந்து மன்னர் சார்லஸின் இறுதி சடங்கிற்கு தயாராகும் பக்கிங்ஹாம் அரண்மனை  உயிருடன் இருக்கும்போதே இப்படியா    வெளிவந்த ஆவணம்…
Advertisement

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணத்தை அடுத்து, பட்டத்து இளவரசரான சார்லஸ் இங்கிலாந்து மன்னராக மகுடம் சூடினார். கடந்த சில மாதங்களுக்கு முன் மன்னர் சார்லஸுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக, பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்தது. அது எந்த வகையான புற்றுநோய் பாதிப்பு என இதுவரை செய்திகள் வெளியாகவில்லை.

Advertisement

புற்றுநோய் பாதிக்கப்பட்டபின்பும் தொடர்ந்து புன்னகையுடன் மக்களிடம் முகம் காட்டினாலும், மன்னர் சார்லஸின் உடல் நிலை மோசமடைந்துவருவதாக அரண்மனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இந்நிலையில், மன்னர் இறந்துவிட்டால் இறுதி சடங்கிற்கான பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்படும், அதற்கான ஏற்பாடுகளில் அரண்மனை நிர்வாகம் இப்போதே இறங்கியுள்ளது.

மன்னர் மரணமடையும் பட்சத்தில், அவரது இறுதிச்சடங்கை எப்படி நடத்துவது என்பது குறித்த திட்டம் தயாராகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. . ’மெனாய் பாலம்’ என்ற மறைமுகப் பெயரிலான மன்னரின் இறுதிச்சடங்கு ஏற்பாட்டுக்கான ஆவணங்கள் தற்போது வெளியே கசிந்துள்ளன.

மெனாய் பாலம் என்பது ஆங்கிலேசி தீவை பிரதான நிலப்பரப்புடன் இணைக்கும் ஒரு தொங்கு பாலத்தின் பெயராகும். இதன் பெயரில் தற்போதைய மன்னர் சார்லஸின் இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகள் திட்டமிடப்பட்டு வருகின்றன. இதே போன்று ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு ஏற்பாடுகள், ஆபரேசன் லண்டன் பாலம் என்ற மறைமுகப் பெயரில், அவர் உயிரோடு இருக்கும்போதே ஆவணங்களாக இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement