ஜனவரி 20: பி.எஸ்.இ என்.எஸ்.இ சிறப்பு நேரடி வர்த்தக அமர்வு.! பங்குச்சந்தை நாளை நடைபெறுமா.?
பம்பாய் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் மற்றும் தேசிய பங்குச்சந்தை ஆகியவை இணைந்து சிறப்பு நேரலை வர்த்தக அமர்வை நாளை நடத்த இருக்கிறது. பேரிடர் மற்றும் அசாதாரண சூழ்நிலைகள் ஏற்படும் போது வர்த்தகத்தை தொடர்வதற்கான வசதிகளை நாட்டின் வேறொரு பகுதியில் பங்குச் சந்தைகள் ஏற்படுத்தி வைத்திருக்கும்.
இது போன்ற மாற்று ஏற்பாடுகள் சிறப்பாக உள்ளதா ஏதேனும் பேரிடரால் பாதிக்கப்படும்போது உடனடியாக வணிகத்தை தொடர இயலுமா.? என சந்தைகளை கட்டுப்படுத்தும் அமைப்பான ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் போர்ட் ஆஃப் இந்தியா கேள்வி எழுப்பி இருந்தது. மேலும் இதனை பரிசோதித்துப் பார்க்குமாறு பங்குச்சந்தைக்கு உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவினை தொடர்ந்து பி.எஸ்.இ மற்றும் என்.எஸ்.இ ஆகியவை இணைந்து சிறப்பு நேரலை வர்த்தக அமரவுகளை நடத்த இருக்கிறது . இந்த அமர்வுகள் முதன்மை வர்த்தக தளத்தில் நடைபெறாமல் பேரிடர் மீட்பு வர்த்தக தளத்தில் நடைபெறும் எனவும் தேசிய பங்குச் சந்தை ஆணையம் தெரிவித்திருக்கிறது . இந்த சிறப்பு வர்த்தக அமர்வு, ஸ்டாக் மற்றும் ஈக்விட்டி & ஆப்ஷன் பிரிவுகளுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் தெரிவித்துள்ளது.
நாளை நடைபெற இருக்கும் சிறப்பு வர்த்தக அமரவு பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்ட ஜியோஜித் ஃபைனான்சியல் சர்வீசஸின் பங்குச்சந்தை மதிப்பீட்டாளர் ஆனந்த் ஜேம்ஸ்" நாளை நடைபெற இருக்கும் சிறப்பு வர்த்தக அமரவு நடைமுறையில் இருக்கும் பங்குச் சந்தை நிகழ்வுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என தெரிவித்திருக்கிறார். இது போன்ற விஷயங்களை பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் நாளை நடைபெறும் சிறப்பு வர்த்தக அமர்வில் இது குறுகிய காலத்தில் விரைவாக நடக்கும் வர்த்தகம் என்பதால் முதலீடு செய்பவர்களுக்கு தகவல்களை பெற போதுமான காலம் இருக்காது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த பங்கு வர்த்தகத்தில் ஏற்ற இறக்கங்கள் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தாது எனவும் தெரிவித்திருக்கிறார் . பங்குச்சந்தையின் மதிப்பு 5% கட்டுப்படுத்தப்படும் என தெரிவித்த அவர் முதல் சிறப்பு அமர்வில் நிலுவையில் உள்ள பங்குகள் இரண்டாவது அமர்வு ஆரம்பிக்கும் முன்பு வெளியேற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
பிரபுதாஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆலோசகராக பணியாற்றும் ஷிஜு கூத்துபாலக்கல் என்பவர் இந்த வர்த்தகம் பற்றி கூறுகையில் " இந்த சிறப்பு வர்த்தக அமர்வில் பணம் மற்றும் F & O மூலமாக மட்டுமே பங்குகளை வாங்கவும் விற்கவும் முடியும் என தெரிவித்திருக்கிறார். இந்த அமர்விற்கான கால அளவு குறைவாக இருப்பதால் ஒரு முதலீட்டாளர் ஒரு ஆர்டரை விரைவான வீதத்தில் வைக்கும் படி இருக்கும். மேலும் வளமையான வர்த்தகத்தை போல் பங்குகளைப் பற்றி ஆராய்ந்து வாங்குவதற்கு நேரம் இருக்காது எனவும் தெரிவித்திருக்கிறார்.
முதல் அமர்வு காலை 9:15 மணிக்குத் தொடங்கி 10:00 மணிக்கு முடிவடையும், இரண்டாவது அமர்வு காலை 11:30 மணிக்குத் தொடங்கி மதியம் 12:30 மணிக்கு முடிவடையும். இந்த சிறப்பு நேரடி வர்த்தக அமர்வில் அனைத்து எதிர்கால ஒப்பந்தங்களும் 5 சதவீத செயல்பாட்டு வரம்பைக் கொண்டிருக்கும். இந்த சிறப்பு அமர்வில், F&O பிரிவில் வர்த்தகம் செய்யப்படும் பங்குகள் உட்பட, பத்திரங்களுக்கு மேல் மற்றும் கீழ் சுற்று வரம்புகள் 5% இருக்கும். 2% மேல் மற்றும் கீழ் சுற்று வரம்புகளைக் கொண்ட பத்திரங்கள் 2% வரம்பைக் கொண்டிருக்கும்.
இரண்டாவது சிறப்பு நேரடி வர்த்தக அமர்வு பேரிடர் மீட்பு தளத்தில் நடைபெறும். இந்த இரண்டாவது சிறப்பு நேரலை அமர்வில், ப்ரீ-ஓபன் அமர்வு காலை 11:15 மணிக்கு தொடங்கி 11:30 மணிக்கு முடிவடையும். சாதாரண சந்தை காலை 11:30 மணிக்கு திறக்கப்பட்டு மதியம் 12:30 மணிக்கு முடிவடையும். அழைப்பு ஏல அமர்வு காலை 11:45 மணிக்கு தொடங்கி 12:00 மணிக்கு முடிவடையும். நிறைவு அமர்வு மதியம் 12:40 மணிக்குத் தொடங்கி 12:50 மணிக்கு முடிவடையும். வர்த்தக மாற்ற நேரம் மதியம் 1:00 மணிக்கு முடிவடையும்.