கர்நாடகாவில் கொடூரம்!… ஆசனவாயில் பச்சை மிளகாயை தேய்த்து போலீசார் சித்ரவதை!… சாத்தான்குளம் சம்பவம் போல லாக் அப் மரணம்!
பெங்களூருவில் கைதியின் ஆசனவாயில் பச்சை மிளகாயை அரைத்து, போலீஸார் தேய்த்து சித்ரவதை செய்துள்ள நிலையில், விசாரணை கைதி உயிரிழந்துள்ளது பெங்களூரு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில், எச்எஸ்ஆர் லே அவுட்டில் கடந்த டிசம்பர் மாதம் 12ம் தேதி சஞ்சீவ்குமார் போரோ, ஜெனிபர் ஆகியோர் வீட்டிற்கு கணேஷ் என்பவர் சென்றுள்ளார். தன்னை போலீஸ் என்று கூறிய கணேஷ், பக்கத்து வீடுகளில் வசிப்பவர்களுக்கு நீங்கள் பிரச்சினை செய்வதாக புகார் வந்துள்ளது என்று அவர்களை மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். அத்துடன் இந்த பிரச்சினையைத் தீர்க்க பணம் தராவிட்டால்,உங்கள் மீது கஞ்சா வழக்குப் போட்டு சிறையில் தள்ளுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. ஆனால், வீட்டில் பணமில்லை என்று சஞ்சீவ்குமார் கூறியுள்ளார். அவரது வீட்டு லாக்கரை திறந்து கணேஷ் பார்த்துள்ளார். அதில் பணமில்லை.
இதனால் சஞ்சீவ்குமாரை காரில் ஏற்றிக் கொண்டு ஏடிஎம் மையத்திற்குச் சென்றுள்ளார். அங்கு சஞ்சீவ்குமார் ஏடிஎம் கார்டில் இருந்து சுமார் ரூ.2.5 லட்சம் பணம் பெற்றுள்ளார். இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என்றும், உடனடியாக வீட்டைக் காலி செய்யும்படியும் தம்பதியை மிரட்டி விட்டுச் சென்றுள்ளார். இதுகுறித்து சஞ்சீவ்குமார், எச்எஸ்ஆர் போலீஸில் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார், தாவண்கெரே பகுதியைச் சேர்ந்த கணேஷ் என்பவரை, டிச. 22-ம் தேதி கைது செய்தனர்.
இதன் பின் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட கணேஷ் கொடூரமான முறையில் சித்ரவதை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பச்சை மிளகாயை அரைத்து கணேஷின் ஆசன வாயில் தேய்த்துள்ளனர். இதனால் படுகாயமடைந்த கணேஷை சிறையில் அடைத்துள்ளனர். இதனால் கடும் வலியால் அவர் அவதிப்பட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனை போகும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்துள்ளது.
போலீஸாரின் டார்ச்சரால் தான் கணேஷ் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கணேஷின் அந்தரங்க உறுப்பில் உப்பைத் தேய்த்துள்ளனர். அத்துடன் கேரட், முள்ளங்கி கொண்டு ஆசனவாயை காயப்படுத்தியுள்ளனர். பச்சை மிளகாயை அரைத்து ஆசனவாயில் தேய்த்து கொடூரமான முறையில் சித்ரவதை செய்துள்ளனர். இந்த சித்வதையால் கணேஷ் மிகவும் அவதிப்பட்டார். வலிக்கு நடுவே நான்கு நாட்கள் காவல் நிலையத்தில் அவர் வைக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மோசமடைந்தததால் பரப்பா பரப்பன அக்ரஹாரா சிறைக்கு அவசரமாக அனுப்பியதாக கணேஷின் நண்பர் வினோத் குற்றம் சாட்டினார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.