மன அழுத்தம் முதல் நீரிழிவு நோய் வரை.! ஆச்சரியமளிக்கும் அவரைக்காய் நன்மைகள்.!
அவரைக்காய் காய்கறிகளில் சுவை நிறைந்த ஒன்றாகும். இவற்றின் சுவையோடு உடலுக்கு தேவையான ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்து இருக்கிறது. பீன்ஸ் வகையைச் சேர்ந்த இந்த காயில் சோடியம், பொட்டாசியம், மக்னீசியம், புரதச்சத்து, கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி6 ஆகியவை நிறைந்து இருக்கிறது. மேலும் இவை உடலுக்கு பலவிதமான நன்மைகளையும் அள்ளித் தருகிறது.
அவரைக்காயில் வைட்டமின் சி நிறைந்து இருக்கிறது இவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் நமது உடலில் நோய் எதிர்ப்பு தன்மை அதிகரிக்கும். மேலும் நார்ச்சத்துக்கள் நிறைந்த அவரைக்காயை உணவாக எடுத்துக் கொள்வதன் மூலம் செரிமான பிரச்சனை மற்றும் மலச்சிக்கல் ஆகியவை ஏற்படாமல் தடுக்கிறது. இவற்றின் நார்ச்சத்து உடல் எடை குறைப்பிலும் முக்கிய பங்கு வைக்கிறது. அவரைக்காய் துவர்ப்பு சுவை இரத்தத்தை சுத்திகரிக்கிறது. இவை ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதோடு ரத்த நாளங்களில் கொழுப்பு படியாமல் பார்த்துக் கொள்கிறது. இதனால் இதய ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
பிஞ்சு அவரைக்காய் நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்தாகும். அவரைப் பிஞ்சை உணவில் சேர்த்து சாப்பிட்டு வர ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுவதோடு சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் அரிப்பு மற்றும் மயக்கம் போன்றவையும் தடுக்கப்படுகிறது. அவரைக் காயில் இருக்கும் வைட்டமின்கள் மற்றும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நமது நரம்பு மண்டலத்தை பலப்படுத்துகின்றன. இதனால் மன அழுத்தம் தொடர்பான நோய்கள் வருவது தடுக்கப்படுகிறது. மேலும் இவற்றில் இருக்கக்கூடிய கால்சியம் சத்து எலும்புகள் மற்றும் பற்கள் உறுதியாவதற்கு உதவுகிறது.